தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கொழுப்பை குறைத்து, ஆண்மையை அதிகரிக்கும் கேரட்


இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை.
இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்
சக்தி - 41 கலோரிகள், கார்போஹைட்ரேட்ஸ் - 9 கிராம், சர்க்கரை - 5 கிராம், நார்சத்து - 3 கிராம்இ கொழுப்புச் சத்து - 0.2 கிராம், புரோட்டின் - 1 கிராம், வைட்டமின் A – 93% (835 மைக்ரோ கிராம்), பீட்டா கரோட்டின் – 77% (8285 மைக்ரோ கிராம்), வைட்டமின் B1 – 3% (0.04 மில்லி கிராம்), வைட்டமின் B2 – 3% (0.05 மில்லி கிராம்), வைட்டமின் B3 – 8% (1.2 மில்லி கிராம்), வைட்டமின் B6 – 8% (0.1 மில்லி கிராம்), வைட்டமின் B9 – 5% (9 மைக்ரோ கிராம்), வைட்டமின் C – 12% (7 மில்லி கிராம்), கால்சியம் – 3% (33 மில்லி கிராம்), இரும்புச் சத்து – 5% (0.66 மில்லி கிராம்), மாங்கனீஷ் – 5% (18 மில்லி கிராம்), பாஸ்பரஸ் – 5% (35 மில்லி கிராம்), பொட்டாசியம் – 5% (240 மில்லி கிராம்), சோடியம் 2.4 மில்லி கிராம்.
மருத்துவ குணங்கள்
1. வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
2.இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
3. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
4. இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
5. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
6. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
7. கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
8. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
9. இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.
10. கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கேரட் சாதம்
அரிசியை 900 மி.லி தண்ணீரில் அரை மணி நேரம் ஊர வைத்து குக்கரில் வைத்து 2-3 விசில் விட்டு சாதம் தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, க.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து விட்டு பிறகு மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய கேரட்டை கொட்டி 50 மில்லி தண்ணீர் சேர்த்து கிளரி உப்பு சேர்த்து வேக விடவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கி சாதத்துடன் சேர்த்து கிளரினால் சுவையான கேரட் சாதம் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக