தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

வேத வியாச பகவானின் தீர்க்க தரிசனங்கள். ----------------------------------------------------------------------


சுமார் 5,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே, வேதத்தின் தலைவரான வியாச பகவான் அருளிய கலிகாலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனங்கள். அவர் தம் திருவாய் மலர்ந்தருளிய கருத்துக்கள்.
கலியிலே திருமணம் மணல்வீடு ஆகும்!
காவலாம் வேலியே பயிர்களை மேயும்!
பலசாலி அரசாளும் நிலைவந்து சேரும்!
பாமரர் மேல் வரிகள் பலமாக ஏறும்!
வியாபார நேர்மைகள் காணாமல் போகும்!
வீடெல்லாம் சோகங்கள் விளையாட்டு ஆகும்!
குருசிஷ்ய நெறிதர்மம் அரிதாகிப் போகும்!
குலமங்கை பொருளுக்குத் தடுமாறல் ஆகும்!
உள்ளம் உடல் ரெண்டுமே பிஞ்சிலே தீயும்!
ஊரெல்லாம் பக்தியின் வேடங்கள் மேயும்!
(வஞ்சகர்கள் பக்தியின் பெயரால் நாட்டை நாசப்படுத்துவார்கள்) கள்ளக் கணக்குகளும் கொளைகளவும் மிகும்!
கடமையும் கண்ணியமும் நூலளவில் (ஏட்டளவில்) வாழும்!
“போதும் வியாசரே! போதும்! கலியிலே நான் சீரழிந்து சிதரிவிடுவேன் என்று ஒரே வரியில் முடித்து விடுங்கள்” என்று பூமாதேவி அலறினாள்.
“இல்லை தாயே! எத்தனை பாவங்கள் கலியிலே விளையுமோ, அத்தனைக்கும் பலநூறு மடங்காகப் புண்ணியங்கள் நிறையும் புனிதமும் கலியுகத்துகே உரித்தாகிறது!
கிருதயுகத்திலே பத்தாண்டு காலம் தவமிருந்து பெற்ற புண்ணியம் திரேதாயுகத்திலே ஒரு வருடத்திலே கிடைத்தது! அதுவே, துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில் வந்தது! கலியுகத்திலே.... ஒரே நாளில் அடையலாம்!
“அஸ்வமேத யாகமோ, அனலிடை நின்று அருந்தவமோ, கானகம் செல்லவோ, காற்றைப் புசிக்கவோ தேவையில்லை! இறைவனது நாமத்தை பக்தியோடு பூஜிப்பதாலும், முறையாகத் திருக்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதாலுமே எல்லா நன்மைகளையும் கலியுகத்திலே மாநுடர் பெற்றுவிட முடியும்!
இதற்க்கு” அகத்தியர் வழியிலே ஒரு சித்தர் பரம்பரை, பூமியிலே தோன்றப் போகிறது! அழியாத ஒளி உடம்போடு .... பலநூறு வருடங்கள் பூமியில் அவர்கள் பூமியிலே இருப்பார்கள்! மக்கள் எதைச் செய்யலாம், எப்படி வாழலாம் என்பதை ...... “ஞானக்கோவை” யாகப் பாடிவைப்பர். அதையும் மீறிப் பிணியால் வருந்தப் போகும் மாந்தருக்கு, இந்தப் பழனி மலையிலே உள்ள அறிய பல தெய்வீக மூலிகைகள் மருந்தாகப் பயன்படும்” என்று கூறி முடித்தார் வியாச பகவான்.
குறிப்பு: கலியுகத்திலே .... அந்தப் பலநைஒரெ நாளில் அடையமுடியும்!
இதற்குமுன் மூன்று யுகத்திலும் அடையமுடியாத ஞானத்தை கலியுகத்தில் ஒரே நாளில் ஞானத்தைப் பெறலாம் என்று வியாச பகவான் சொன்னதின் சாரம்:
“ஓம் அகத்தீசாய நம” என்று தூய மனதோடு ஒருமுறை சொன்னால், அகத்தீசரின் சீடர்களாகிய ஒன்பது கோடி ஞானிகளும் நம்மைப் பார்க்கிறார்கள். அத்தனை பேரும் புண்ணியமும் அருள்பலமும் நிறைந்தவர்கள். மேலும் மரணமிலாப் பெருவாழ்வும் பெற்றவர்கள். அப்பேர்பட்ட ஞானிகள் நம்மை அன்போடு நோக்குவதால், நாம் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம் பொடிப்பொடியாகிவிடும், ஞானமும் சித்திக்கும். அதனால்தான், வேதவியாச பகவான் கலிகாலத்தில் ஒருநாள் பூஜை செய்தாலே பேரும் ஞானத்தை பெற்றிடலாம் என்று மனமகிழ்ந்து அருளியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக