சிவ வழிபாடு மிகத்தொன்மை வாய்ந்தது. பண்டைக் காலத்தில் சிவ வழிபாடு உலகு எங்கிலும் பரவியிருந்தது. அனைத்து மக்களும் சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர்.
அமெரிக்காவில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி ( U .S. Museum of Natural History ) என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த மிகத் தொன்மையான சிவன் கோவிலைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.
23-11-1937 – இல் நியூஸ் ரிவ்யூ ஆஃப் லண்டன் (News Review of London) என்ற நாளேட்டில் அச்சிவன் கோயிலைப் பற்றிய செய்தி வந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் செல்ல முடியாத கொலாராடோவில் உள்ள ஒரு மலை பகுதியில் “மறைந்து போன உலகம்” என்ற ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அம்மலைப்பாறையின் மேல் ஏறக்குறைய அரை மைல் சதுரப் பரப்பில் பழைய சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 ஆயிரம் அடிக்கு மேல் மலைப்பாறையில் அச்சிவன் கோயில் அமைந்துள்ளது என்பது அந்நாளேட்டில் வந்த செய்தியாகும். சிவவழிபாடு பரவியிருந்த நிலையையும் அதன் பழமையையும் இதனால் அறியலாம்.
அது மட்டும் அல்ல. புராணங்களில் பாதாள உலகம் என்று குறிப்பிடப்படுவது அமெரிக்காவை தான். அமெரிக்காவில் உள்ள Horse Island, Ash Island. இரண்டும் பகீரத புராணத்தோடு தொடர்பு உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக