தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஆகஸ்ட், 2015

சூரிய சக்தியில் இயங்கும் முதலாவது பந்தயக் கார்

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய சாதாரண கார்களின் வடிவமைப்பே முழுமையடையாத நிலையில் மின்னல் வேகத்தில் பயணிக்கக்கூடிய பந்தயக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Immortus எனப்படும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத இந்தக் கார் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் அமைந்துள்ள Swinburne University பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏழு செக்கன்களில் மணிக்கு 100 கிலோமீற்றர்கள் எனும் வேகத்தை அடையக்கூடிய இக் காரானது சூரிய சக்தி மூலம் சேமிக்கப்படும் மின் சக்தியில் 85 km/h எனும் வேகத்தில் 550 கிலோமீற்றர்கள் வரை பயணம் செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
மேலும் இதன் விலையானது 370,000 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக