தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தூக்க மாத்திரை சாப்பிடுவது நல்லதா? கால் பாதங்கள் வலிக்க காரணம் என்ன? அறிந்துகொள்ளுங்கள்

ஆரோக்கியம் தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்கள் இதோ,
கால் பாதங்கள் வலிக்க காரணம் என்ன?
கால் பாதங்கள் வலிக்க காரணம், தைராய்டு பிரச்சனை இருக்கலாம். தைராய்டு பிரச்சனை இருந்தால், கால்கள் வலிக்கும், உடல் சோர்வடையும். மேலும், பாதங்களிலுள்ள திசுக்கள் சேதமடைந்து இருந்தாலும், பாதங்கள் வலிக்க தொடங்கும்.
அதோடு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது. நீரிழிவு நோய் இருந்தாலும், கால் பாதங்கள் வலிக்கும். அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.
குதிகால் எலும்பிலிருந்து, 'பிளான்டர் அப்போனீரோசிஸ்' எனும் திசுக்கொத்து, கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது.
குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில், ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகும். அதனாலும் குதிகால் வலி ஏற்படும்.
தூக்க மாத்திரை சாப்பிடுவது நல்லதா?
நன்றாகத் துாங்கி எழுவதற்கு, தினமும் துாக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல.
மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால், உடலில் வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். துாக்க மாத்திரையைச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், திடீரென அதை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் துாக்கம் பாதிக்கப்படும்.
கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
இது சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதையே குறிக்கிறது.
டிப்ஸ்: உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக