தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பனிப்பொழியும் இரவில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2000 மக்கள் திடீர் மாயம்: நீங்காத மர்மம்!


கனடாவில் அமைந்துள்ள Angikuni Lake என்ற ஏரியின் அருகே, Angikuni என்றழைக்கப்பட்ட கிராமத்தில் வாழ்ந்த 2000 குடியிருப்புவாசிகள் மாயமான சம்பவம் மர்மமாகவே நீடிக்கிறது.
Angikuni கிராமத்தில் சுமார் 2000 எஸ்கிமோக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் விலங்கின் தோல்களை விற்று அதன் மூலம் தங்கள் வாழ்வை நடத்தி வந்துள்ளனர்.
எனவே அவர்கள் விலங்கை வேட்டையாடுவதற்காக வேட்டை நாய்களையும் வளர்த்து வந்துள்ளனர்.
அந்த கிராமத்தினரிடம் இருந்து விலங்கின் தோல்களை வாங்கி செல்ல எண்ணற்ற வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், அந்த கிராமத்தில் கடந்த 1930ம் ஆண்டு, நவம்பர் மாத பனி காலத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
அன்று கனடாவை சேர்ந்த ஜோ லேபலே என்னும் விலங்கு தோல் சேகரிக்கும் நபர், அந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அவர் அந்த கிராமத்தை அடைந்த போது அங்கு ஒரு அமானுஷ்ய அமைதி மட்டுமே நிலவியுள்ளது.
ஜோ லேபலே கண்ணில் ஒரு கிராம வாசி கூட காணப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த அவர்களது கூடாரங்களை தேடி சென்றுள்ளார்.
தெருக்கள் மட்டுமல்லாமல் அனைத்து கூடாரங்களும் ஆட்கள் இல்லாமல் காலியாகவே இருந்துள்ளது.
மேலும் அவர்கள் வளர்த்த வேட்டை நாய்கள் ஒன்று கூட அந்த கிராமத்தில் இல்லை.
வறுமை மற்றும் பஞ்சம் காரணமாக அவர்கள் அந்த கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்திருக்கலாம் என்று நினைத்த அவர், அவர்களுடைய தானிய கிடங்கினை சோதனையிட்டுள்ளார்.
ஆனால் அங்கிருந்த அனைத்து கூடாரங்களிலும் போதுமான அளவில் உணவும், மீன்களும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்துள்ளன.
இதனால் மேலும் குழப்பமும் அதிர்ச்சியும்டைந்த ஜோ, கிராமத்தினரின் காலடி தடங்கள் எதுவும் உள்ளதா அதன் மூலம் அவர்கள் எந்த திசையில் சென்றார்கள் என்று அறிய அந்த பனி பிரதேசத்தில் தேடியுள்ளார்.
ஆனால் எங்குமே அந்த கிராமத்தினரின் கால் தடங்கள் கூட இல்லாதது மேலும் அவரது அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பயத்தில் தந்தி அலுவலகம் நோக்கி ஓட்டமெடுத்த அந்த நபர், கனடிய பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை பற்றி தந்தி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர். எவ்வித தடையமும் கிடைக்காததை அடுத்து பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டு சோதனை நடந்துள்ளது.
அப்போது அந்த பனி பிரதேசத்தின் குறிப்பிட்ட இடத்தில், 12 அடி ஆழத்தில் வேட்டை நாய்கள் அனைத்தும் பட்டினியால் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மேலும் அங்கிருந்த கல்லறைகளை தோண்ட முயற்சித்த போது, பனிக்கட்டிகள் பாறையை விட கடுமையாக இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த கல்லறைகள் அனைத்தும் காலியாக இருந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு புதைக்கப்பட்டிருந்த உடல்கள் யாரால், எதற்காக அகற்றப்பட்ட்து என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே இந்த வினோத சம்பவத்தில் வேற்றுக் கிரகவாசிகளின் தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தோன்ற தொடங்கியது.
பல நாட்களாக தேடியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், அந்த கிராம வாசிகள் சமைத்த உணவை வைத்து அவர்கள் 2 வாரங்களுக்கு முன்பாகவே சென்றிருக்கலாம் என்று பொலிஸ் கூறினர்.
அப்படியெனில் பனியால் சூழ்ந்த அந்த கிராமத்தில் ஜோ நுழைந்த போது, எரிந்த தீப் பந்தங்கள் யாரால் கொளுத்தப்பட்டது என்பது போன்ற எண்ணற்ற விடை தெரியா கேள்விகள் மிச்சம் இருந்தன.
இந்த சம்பவம் உண்மை சம்பவம் அல்ல என்றும், புனைவு கதை தான் என்றும் கூறப்படுவதால் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில் பெரும் குழப்பமே நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக