தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஜேர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தது கண்டுபிடிப்பு: பிரமிக்க வைக்கும் ஆதார புகைப்படங்கள்

ஜேர்மனி நாட்டில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான உறுதியான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியை சேர்ந்த மெய்பொருள் மூல ஆராய்ச்சியாளர்கள், டைனோசர்கள் ஜேர்மனியில் வாழ்ந்தனவா என்பது குறித்து பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹேனோவேர் நகரில் சுமார் 135 முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கடந்த வாரம் உறுதிப்படுத்தினர்.
கிரெடாசியஸ் காலத்தில் நீண்ட கழுத்துடைய பல டைனோசர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான பிரமாண்ட கால் தடங்கள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கால் தடங்கள் 1.20 மீற்றர் குறுக்களவிலும், 50 மீற்றர் தூரம் நீளமும் உடையதாக இருக்கின்றன.
இது குறித்து பேசிய Benjamin Englich என்ற ஆராய்ச்சியாளர், நீண்ட கழுத்துடைய இந்த டைடோனசர்கள் வெகுதூரம் பயணம் மேற்கொண்டபோது இந்த கால் தடங்கள் பதிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு கால் தடமும் 43 செண்டி மீற்றர் வரை பூமியில் பதிந்துள்ளதால், இந்த டைனோசர்களின் எடை சுமார் 25 முதல் 30 டன் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தெரபோடா இனத்தை சேர்ந்த டைனோசர்கள் வாழ்ந்து மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த டைனோசர்கள் இந்த பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்.
மேலும், இந்த பகுதியில் இருந்து உணவுக்காக பல தீவுகளுக்கு இந்த டைனோசர்கள் ஆறுகள் வழியாக பயணம் செய்திருக்க வேண்டும்.
தற்போது டைனோசர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள இந்த பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து மேல் ஆராய்ச்சிக்காக பாதுகாத்து வருவதாக Benjamin Englich தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக