தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 ஆகஸ்ட், 2015

வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!

எண்ணெய்யில் வறுத்த உணவுகளை விட, வேகவைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
ஏனெனில் வேகவைத்த உணவுகளில் உள்ள சத்துக்களே உடலில் சேரும்,
அந்தவகையில் வேகவைத்து சாப்பிடவேண்டிய உணவுகள் சில,
1. கேரட்டை குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் உப்பு சேர்ந்து வேகவைத்து சாப்பிடவேண்டும், வேகவைத்த கேரட் தான் கண்களுக்கு நல்லது.
2.தினமும் ஓர் வேகவைத்த பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டம் சீர்படும். மேலும், பீட்ரூட்டை 3 நிமிடங்கள்தான் வேகவைக்க வேண்டும்.
3.வேகவைத்த உருளைக்கிழங்கில் கலோரிகள் குறைவு, இதனால் உடல் எடை போடாமல் பார்த்துக்கொள்ளலாம்.
5.பீன்ஸை வேகவைத்து அதில் கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
6.சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு போய் சேரவேண்டுமெனில் இதனை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
7.காலிபிளவர், ப்ராக்கோலி போன்றவற்றை எண்ணெய்யில் வதக்கி சாப்பிடுவதை விட, வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக