கொட்டாவி விடாதவர்கள் பெரும்பாலும் மனநோயாளிகளாக இருப்பார்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பைலர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் இது தொடர்பான தங்களது கண்டுபிடிப்புகளை சமீபத்தில் வெளியிட்டனர்.
இதில் மன நோயாளிகள், கொடூர சிந்தனைகளுக்கு ஆட்பட்டவர்கள் ஆகியோர் பெரும்பாலும் கொட்டாவி விடுவதில்லை என கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்கென தெரிவு செய்யப்பட்ட 135 மாணவர்களிடம் மன நோய்க்கான பண்புகள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
இவர்களிடம், பொதுவாக மக்கள் பயன்படுத்தும் முகபாவங்கள் மற்றும் கொட்டாவி போன்றவற்றின் வீடியோ துணுக்குகளை காண்பிக்கப்பட்டது.
இதில், அதிக மன நோய்க்கான பண்புகளை வெளிப்படுத்திய மாணவர்கள் மிக அரிதாக கொட்டாவி விடுவதை கண்டுபிடித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக