பல ஆளுமை கோளாறு (Multiple Personality Disorder) நோய் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆளுமை திறன்கள் மாறி மாறி வந்து மனிதனை ஆட்கொள்வதே ஆகும்.
அதாவது பகற்கனவு காண்பது, அல்லது மிகவும் சுவாரசியமான ஒரு நிகழ்வில் ஒன்றிப் போயிருப்பது இது போன்ற மன நிலையின் உச்சமே பல ஆளுமை கோளாறு.
ஒரு மனிதனின் சிந்தனை, ஞாபகம், உணர்ச்சிகள் என அனைத்தில் இருந்தும் மனோ இயங்கு முறை விடுபட்டு இருக்கும் நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர் தனது நிகழ்கால சூழலில் இருந்து முற்றிலும் விடுபட்டு வேறு நிலைக்கு மாறியிருப்பார்கள்.
இதனால் பாதிக்கப்படும் நபர் அதிகப்படியான ஞாபக மறதியால் அவதிப்படுபவராக இருப்பார் என மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கோளாறினால் பாதிக்கப்பட்டவரால் தனது முக்கிய தனிப்பட்ட தகவல்களை கூட ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் நிலையை இழக்கின்றனர்.
இவர்கள் தமது வயது, பாலினம், இனம் என அனைத்திலும் வேறுபட்ட அடையாளங்களை கொண்டிருப்பார்கள்.
மேலும் தனித்துவமான செய்கைகள், தோரணைகள், வேறுபட்ட பேச்சு என முற்றிலும் மாறுபட்டே இருப்பார்கள்.
சமயங்களில் இவர்கள் கற்பனை உருவகங்களாகவும், சில சமயங்களில் விலங்குகளாகவும் மாறக்கூடும். இந்த மாறுதல் சில நேரம் நொடிகளில் முடிவுக்கு வரும், அல்லது நிமிடங்கள் வரை நீடித்து சில நாட்கள் வரை ஆகலாம்.
இந்த நிலையில் இருக்கும் நபரை ஹிப்னாஸிஸ்(hypnosis) செய்யப்படும்போது அவர் மருத்துவரோடு அதிக ஈடுபாடு காட்டுபவராக இருப்பார் என கூறப்படுகிறது.
அறிகுறிகள்
பல ஆளுமை கோளாறினால் பாதிக்கப்பட்டவர், மன அழுத்தம், எதிலும் ஈடுபாடு அற்ற நிலை, தற்கொலை எண்ணம், தூக்கத்தில் நடப்பது அல்லது தூக்கமின்மை, கவலை, பீதியால் ஆட்கொள்தல், அதிக பயம், மது மற்றும் போதைக்கு அடிமையாவுதல், அதீத பக்தி நாட்டம், அதிக உணவு உட்கொள்ளுதல் அல்லது உணவில் நாட்டமின்மை என ஏதேனும் அறிகுறிகளை வெளிப்படுத்துபவராக இருப்பார்.
மேலும் இதனால் பாதிக்கப்பட்ட சிலர், அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துபவராகவும், திருட்டு போன்ற குற்றங்களை புரிபவராகவும் காணப்படுவார்.
சிகிச்சைகள்
பல ஆளுமை கோளாறினை நோய் ஆய்வுறுதி செய்வது என்பது விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே உறுதி செய்யப்படுகிறது.
தோராயமாக பாதிக்கப்பட்ட ஒருவரை ஏழு ஆண்டுகள் வரை கண்காணிப்பில் வைத்து ஆயுவுக்கு உட்படுத்தப்படுகிறார்.
பொதுவாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுவது என்னவென்றால், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 1% பேர் பல ஆளுமை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
ஆனால் 7% மக்கள் இந்த கோளாறு இருப்பதை அறியாமலே உலகெங்கும் வாழ்ந்து வருகின்றதாக மனோவியல் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
பல ஆளுமை கோளாறினை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்றபோதும், நீண்ட கால சிகிச்சையினால் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் பேச்சு சிகிச்சை, மன நல சிகிச்சை, அறிதுயில் சிகிசை என இது சார்ந்த பயனுள்ள சிகிச்சை முறைகளை கடைபிடித்தாலே கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக