தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்த தமிழர்கள்: தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு

சிவகங்கை அருகே சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வு துறை கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு சுமார் 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் முதலாம் நூற்றாண்டினை சேர்ந்த அரியவகை பொருட்களும் அதற்கான சுவடுகளும் கிடைத்துள்ளன.
அவற்றில் ரோமானியர்கள் பயன்படுத்திய அகலமான செங்கல்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள், சுட்ட மண்பாண்ட பொருட்கள், மண்பாண்டத்திலான உரைகிணறுகள், பழுங்கி கற்கல் மற்றும் விலங்குகளின் எழும்புகளால் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள் கிடைத்துள்ளன.
மேலும், இதன் மூலம் இந்த நகரம் மிகபெரிய வணிக நகரமாக விளங்கியிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக