இறை கோவிலா? கலை பொக்கிஷமா? பார்த்து கூறுங்கள் (வீடியோ இணைப்பு)
எகிப்து லக்ஸரில் அமைந்துள்ளது கர்நாக் கோவில். இது கர்நாக் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
ஆனால், இந்த பழமையான கோவில் இப்போது முழுமையாக இல்லை.
கோவில் வளாகம் சிதைந்துபோய் கோவில்களும், தேவாலயங்களும் சிற்பங்களுமாக ஒரு பரந்த நிலப்பரப்புக்குள் அங்குமிங்குமாகவே உள்ளன.
கர்னாக் கோவில் மன்னர் சென்சுரெட்1 ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. இது ப்டோலமைக் ஆட்சிகாலத்திலும் தொடர்ந்தது. புதிய ஆட்சியில்தான் கோவிலை தொடர்ந்து விரிவாக்கப்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டன.
கோவிலைச் சுற்றிய பகுதிகள், பழைய எகிப்தின் முக்கிய இடமான இபெட்-இசுட் ஆகும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் எகிப்து லக்ஸர் மக்களின் முக்கிய வழிபாட்டுத் தளமாக இருந்தது.
தீப் வம்சத்தின் மூன்று தெய்வங்களின் தலைவனாக அமுன் இருந்தது. இது தீப் மக்களின் நினைவு நகரமாக இப்போதும் விளங்குகிறது.
இந்த விசாலமான கோவிலின் பல பகுதிகளிலும் தனித்தனியாக கிடக்கும் சுவர்கள், வாயில்கள், தூண்கள், சிலைகள் சிதிலமடைந்தது போல காணப்பட்டாலும் கலைநய சிறப்பை தன்மீது இன்னும் போர்த்திக் கொண்டிருக்கின்றன.
கல்வெட்டு ஓவியங்களும் சிற்பங்களும் நல்ல வேலைப்பாடு.
வரிசையாக ஆடுகள் படுத்திருப்பது போலவும் அதன் தலைக்கு கீழிருந்து ஒரு மனிதன் நின்று வணங்குவதும் உயிரோட்டமாக உள்ளது.
மேலும் பெண்களின் சிலைகள் விலங்குகளின் சிற்பங்கள், மரங்கள் மற்றும் புரியாத புதிரான ஓவியங்கள், வாழ்ந்த ஒரு அற்புத கலைஞனை காலம் சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
அந்த பகுதியாகவே பரவிக்கிடக்கும் செம்மஞ்சள் நிறம் அதன் பழமைக்கும் எகிப்து மண்ணின் எழிலுக்குமான ஒரு வெளிப்பாடு.
கோவிலை ஒட்டி அழகாக வடிவமைத்து கட்டப்பட்ட குளம் இருக்கிறது.
கோவில் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு குளமும் இருப்பது, இந்தியாவுக்கு மட்டுமல்ல எகிப்துக்கும் இது கலாச்சாரமோ என்ற கேள்வி எழுகிறது.
கர்னாக் வளாகத்தை சுற்றியுள்ள நவீன கிராமமான எல்-கார்னாக், லக்ஸருக்கு 2.5 கி.மீ. தூரத்திலேயே வடக்கில் அமைந்திருப்பதால் அதன் பெயரோடு சேர்ந்தே குறிப்பிடப்படுகிறது.
கர்னாக்கின் தெற்கே அமுன் ரீ வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள கோவில் ஒன்று பெண் தெய்வத்துக்காக கட்டப்பட்டுள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் தீப் அரச வம்சத்தினரால் வழிபட்டு வந்த கடவுளான மும்மூர்த்திகளில் ஒருவரான அமுன் ரீயின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனோடு பல சிறிய கோவில்களும் தொடர்புள்ளன. பிறை வடிவத்தில் கட்டப்பட்ட புனித ஏரியும் கோவிலுக்கு என்று உள்ளது.
இந்த கோவிலின் முற்றத்தில் 600 கருங்கிரானைட் சிலைகள் உள்ளன. இதுவே இந்த பகுதியின் மிகப் பழமையானது. தற்போது இது பொதுமக்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமுன் ரீ வளாகத்தின் வடக்கே சிறிய கோவில் மொண்டுவுக்கு உள்ளது. மொண்டு மட் மற்றும் அமுன் ரீயின் மகனாகும். இது தீப் மக்களுடைய கடவுளின் போர் வீரனான காவல் தெய்வமாகும்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பெட்சி பிரையன் தலைமையில் இந்த மட் கோவில் 2006 ல் தோண்டி ஆராயப்பட்டது.
அப்போது இதுக்கு நிறைய சமய குருமார்கள் இருந்துள்ளதும், சடங்குகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகிற திருவிழாக்களும் நடந்துள்ளதும் தெரிய வருகிறது.
மேலும், இங்குள்ள சிலைகள் போர்வீரர்களின் நினைவாகவும் காவல் தெய்வங்களின் சார்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.
உலோக காலத்தைக் கடந்தும் கணனி காலத்தோடு போட்டியிடக் கூடிய தகுதியோடு இருக்க காரணம் இது கொண்டிருக்கும் மதிப்பான கற்பனையும் கைவண்ணமுமே.
சாதாரண கல்லும் மண்ணும் நல்ல கலைஞனின் கைபட்டதால் காலம் கடந்தும், கலை விந்தையாக நிற்கிறது. ஒரு பாலமாக அந்த காலத்துக்கே பார்ப்பவர்களை கொண்டுசெல்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக