Xiaomi நிறுவனமானது Redmi 2 Prime எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
110 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு, 720 x 1280 Pixel Resolution உடைய IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 64-bit 1.2GHz Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இரட்டை சிம் வசதி, 4G தொழில்நுட்பம், 2200mAh போன்றவற்றினையும், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக