iPhone கமெராவை பழமைவாய்ந்த கமெராவாக மாற்றும் அப்பிளிக்கேஷன்,புதிய பரிணாமத்தில் முப்பரிமண பிரிண்டர்: விஞ்ஞானிகள் சாதனை
சமகாலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் கைப்பேசிகளில் அப்பிளின் iPhone கைப்பேசியின் கமெராக்கள் மிகவும் துல்லியம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றது.
அதாவது 1080p HD மற்றும் 60 fps வேகத்தில் காட்சிகளைப் பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான கமெராவினை 1980 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வீடியோ கமெராக்களைப் போன்று மாற்றி வீடியோ பதிவு செய்வதற்குரிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
VHS Camcorder குறித்த அப்பிளிக்கேஷனினை 2.99 பவுண்ட்ஸ்கள் செலுத்தி iTunes தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இதன் மூலம் 30 வருடங்களுக்கு முன்னர் பார்வையிட்ட காட்சியமைப்புக்கள் போன்ற காட்சிகளை பதிவு செய்துகொள்ள முடியும்.
புதிய பரிணாமத்தில் முப்பரிமண பிரிண்டர்: விஞ்ஞானிகள் சாதனை
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 06:06.05 மு.ப GMT ]
பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் முப்பரிமாண (3D) பிரிண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.
ஆனால் முதன் முறையாக ஒரே நேரத்தில் 10 வகையான பொருட்களை பிரிண்ட் செய்யக்கூடிய முப்பரிமாண பிரிண்டரை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
MultiFab எனும் இப் பிரிண்டரின் கண்டுபிடிப்பில் Computer Science மற்றும் Artificial Intelligence Lab (CSAIL) , Massachusetts Institute of Technology (MIT) ஆகிய நிறுவனங்களில் விஞ்ஞானிகள் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.
மேலும் இக் கண்டுபிடிப்பிற்காக 7,000 அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப் பிரிண்டர் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள 42 வது International Conference and Exhibition on Computer Graphics and Interactive Techniques கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக