ஒரு பொதுக் கழிவறையின் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கு சுமார் ஆயிரம் நோய் விளைவிக்கும் கிருமிகள் வரை இருக்கலாம்.இதுவே, வீடுகளில் உள்ள தனிப்பட்ட கழிவறைகளில் சுமார், ஐம்பது முதல் முந்நூறு கிருமிகள் இருக்கக்கூடும்.
இந்நிலையில் காலை எழுந்து கழிவறைக்கு செல்வது முதல் இரவு கட்டிலுக்கு
செல்வது வரை உங்களுடனேயே பயணிக்கும் ஸ்மார்ட்கைப்பேசியின் ஒவ்வொரு சதுர
அங்குலத்துக்கும் சுமார் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீங்கு
விளைவுக்கும் பாக்டீரியா கிருமிகள் தொற்றிக் கொண்டுள்ளன என்று ஆய்வின்
மூலம் தெரியவந்துள்ளன.
ஸ்மார்ட் கைப்பேசிக்கு அடுத்த நிலையில், ஐபேட்டில் சுமார் 600
பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வின் மூலம்
கண்டறியப்பட்டுள்ளது.
கணனியின் தட்டச்சுப் பலகையில், பொதுக் கழிவறையைக் காட்டிலும் மூன்று
மடங்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதில், ஒரு சதுர
அங்குலத்துக்கு சுமார் மூன்றாயிரம் கிருமிகளும், மவுஸ்களில் சுமார்
ஆயிரத்து அறுநூறு கிருமிகளும் இருப்பதாக வெவ்வேறு ஆய்வுகளின் வாயிலாக
தெரியவந்துள்ளது.
எல்லா இடங்களுக்கும் கைபேசியுடன் செல்வதால் ஏற்படும் கிருமிகள் தொற்றின்
காரணமாகவே புதுப்புது வியாதிகளால் மனிதர்கள் தாக்கப்படுகின்றனர் என
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக