உடலில் இருந்து கொழுப்பு எவ்வாறு வெளியேறுகிறது என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
நாம் உட்கொள்ளும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறுகிறது. குறிப்பாக இதை ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் (triglyceride molecules) என்று கூறுகிறார்கள்.
இதில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, இந்த ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் உடைந்து வெளியேறுகிறது, இது ஆக்ஸிடேஷன்(Oxidation) என்று அழைக்கப்படுகிறது.
பத்து கிலோ எடையிலான கொழுப்பை எரிக்க, 29 கிலோ ஆக்ஸிஜனை நீங்கள் மூச்சாக உள் இழுக்க வேண்டியிருக்கிறது.
எடை குறைப்பு செயல்பாட்டில் 84% கொழுப்பு CO2-வாக தான் வெளியேறுகிறது. இது நுரையீரல் வழியாக வெளியேறுகிறது.
மீதமுள்ள 16% கொழுப்பு உடலில் இருந்து நீராக வெளியேறுகிறது. இந்த ஆய்வின் மூலமாக, உடல் எடை குறிப்பில் முக்கியமாக செயல்படும் உடல் உறுப்பு நுரையீரல் என்று கண்டறிந்துள்ளனர்.
மேலும், உடல் எடை குறைப்பு செயல்பாட்டில், சிறுநீராகவும், வியர்வையாகவும், கண்ணீராகவும், கொழுப்பு நீர் வடிவில் வெளியேறுகிறது என கண்டறிந்துள்ளனர்.
உடல் எடைக் குறைப்பதற்கு ஜாக்கிங், ஓட்டப்பயிற்சி தான் சிறந்தது, இந்த பயிற்சிகளில் ஈடுபடும் போது தான் நாம் அதிகமாக சுவாசிக்க முடியும், மற்றும் நுரையீரல் நிறைய மூச்சை உள்ளிழுத்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக