தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

Google Maps தரும் அதிரடி வசதி

இணைய ஜாம்பவானான கூகுளின் பல்வேறு சேவைகளுள் Google Maps சேவையும் பிரபல்யமானதாகக் காணப்படுகின்றது.
இச்சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.
இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் காலத்திற்கு காலம் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் கூகுள் நிறுவனம் தற்போது Night Mode எனும் புதிய வசதியினை உட்புகுத்தியுள்ளது.
முதன்முறையாக iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனில் இந்த வசதி தரப்பட்டுள்ளது.
இவ்வசதியானது இரவு நேரங்களில் இலகுவான முறையிலும், துல்லியமாகவும் Google Maps சேவையைப் பயன்படுத்துவதற்கு உதவுகின்றது.
இவை தவிர இடங்களைப் பெயரிடுதல், தேடல்களுக்கான ஆலோசனைகள், போஸ்ட் செய்யப்பட்ட புகைப்படங்களுக்கான தலைப்புக்களை எடிட் செய்தல் போன்றவற்றுடன் மேலும் சில தவறுகள் நீக்கப்பட்டதாக இப்புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக