தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஆகஸ்ட், 2015

அளவில் பெரிய டேப்லட்டினை வடிவமைக்கும் Samsung


அப்பிள் நிறுவனம் 12.9 அங்குல அளவுடைய iPad Pro இனை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்ற நிலையில், அதற்கு போட்டியாக 18.9 அங்குல அளவுடைய டேப்லட்டினை அறிமுகம் செய்யும் நடவடிக்கையில் சம்சுங் நிறுவனம் இறங்கியுள்ளது.
Tahoe எனும் குறியீடு மற்றும் SM-T670 எனும் மொடல் இலக்கம் என்பவற்றுடன் வடிவமைக்கப்பட்டு வரும் இச் சாதனத்தில் 1.6GHz வேகத்தில் செயல்படக்கூடிய Octa Core Samsung Exynos 7480 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகா பிகல்சகளை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 5700 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இச் சாதனமானது Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Dropbox அறிமுகப்படுத்தும் புதிய வசதி
[ சனிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2015, 05:10.16 மு.ப GMT ]
கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கி வரும் Dropbox ஆனது தற்போது புதிய வசதி ஒன்றினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இதுவரை காலமும் வீடியோ, புகைப்படங்கள், ஏனைய கோப்புக்களை மட்டும் சேமிக்கக்கூடிய வசதியை வழங்கி வந்ததுடன் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை (URLs) சேமிக்கக்கூடிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
அதிலும் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் இணைய முகரியை அவசியம் எனின் Drag and Drop முறை மூலம் இலகுவாக சேமிக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
மேலும் இந்த வசதியினை ஒன்லைன் மற்றும் டெக்ஸ்டாப் அப்பிளிக்கேஷன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக