தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நல்ல பழக்கவழக்கங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

ஆரோக்கிய வாழ்க்கைக்கு சில நல்ல விடயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
1.போரடிக்கிறது என அடிக்கடி காபி, டீ குடிப்பதை தவிர்த்துவிட்டு தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
2.ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
3.ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம்.
ஆனால், குளிர்காலங்களில் கறுப்பே நிறம் அணிவது சிறப்பு.
4. கணனிகளில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
5.சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது.
சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக