தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உயிரியல் பரிணாமவியல் கொள்கை.


உயிரியல் பரிணாமவியல் கொள்கை.
================================
வைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட
பகவான் திருமால் இந்த பூமியில்
பத்து அவதாரங்கள் எடுத்ததாக வைணவ
நோக்கில் கூறப்படுகிறது.
அவையே தசாவதாரம் என்று அழைக்கப்படுகிறது.

இதில் வியக்கத்தக்க சிறப்பம்சமாக
என்னவென்றால் இன்றைய
அறிவியலாளர்களின் உயிரியல்
பரிணாமவியல் கொள்கையோடு தசாவதாரம்
கருத்தியல் பிசகாமல் ஒத்து போவது தான்.
ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது

மச்ச அவதாரம் – (மீன்- நீர் வாழ்வன)
---------------------------------------------------------------
பிரளய காலத்தில் மீனாக திருமால்அவதாரம்
எடுத்து உலகை காப்பாற்றியதாக
புராணம் கூறுகிறது. இது தசவதாரத்தில்முதல்
அவதாரமாகும்.
பரிமாணவியல் கொள்கைபடி நீரில்வாழும்
உயிரமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம்
ஆரமித்ததை குறிக்கிறது.

கூர்ம அவதாரம் – (ஆமை-
நீர் நில வாழ்வன)
-------------------------------------------
திருமாலின் இரண்டாவது அவதாரம் கூர்மம்.
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும்
போது,மேரு மலையை தாங்கிபிடிக்க திருமால்
ஆமை ரூபத்தில் அவதாரம் எடுத்ததாக புராணம்
கூறுகிறது.
பரிணாமக் கொள்கையைப்படி நீர்
வாழும் உயிர் நீர்நில வாழும் உயிராக
மாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

வராகஅவதாரம் – (பன்றி- நிலத்தில்
வாழும் பாலூட்டி)
-----------------------------------------------------------
தசவதாரத்தின்
மூன்றாவது அவதாரம் வராகம்
இரணியாசுரன் எனும்
அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால்
எடுத்த அவதாரம் என்று புராணம் கூறுகிறது
பரிணாமிவியல் கொள்கைபடி, நீர்நில
வாழ்பவையாக இருந்தவை நில வாழ்பவையாக
மாறியதை குறிக்கிறது.

நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து
மனிதனாக மாறும் தன்மை)
-------------------------------------------------------------------
தசவதாரத்தின் நான்காவது அவதாரம்
நரசிம்மம். நரன் என்பது மனிதனைக் குறிக்கும்
சொல். மனிதன் பாதியாகவும்,
மிருகம் பாதியாகவும் இருக்கின்ற திருமாலி
அவதாரம் இரணியனை கொல்ல
எடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது
நிலவாழ்பவைகளாக இருந்த மிருகம்
சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி
மிருகம் பாதியாக இருந்த தொடக்க
நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது

வாமணஅவதாரம் – (மனித தோற்றம்)
----------------------------------------------------------------
தசவதாரத்தின்
ஐந்தாவது அவதாரமான வாம
அவதாரமே முழுமனிதனாக திருமால் எடுத்த
அவதாரமென புராணங்கள்
கூறுகின்றன. பரிணாமக்
கொள்கைபடி முழு மனிதனை இந்
அவதாரம் குறிக்கிறது

பரசுராம அவதாரம் –
(மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)
----------------------------------------------------------------
தசவதாரத்தின் ஆறாவது அவதாரம்
பரசுராம அவதாரம். மிகவும் மூர்க்க
மனிதராக இந்த அவதார
சித்தரிக்கப்பட்டுள்ளது.
கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற
மனிதராக பரசுராமர் புராணங்களில்
குறிப்பிடப்படுகிறார். மனிதனாக மாற்றம்
அடைந்த பின்பு, மிருகங்களை மூர்க்கதனமாக
வேட்டையாடியதை இந்த அவதாரம் குறிக்கிறது

ராம அவதாரம் – (குழுக்களாக
இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)
-----------------------------------------------------------------------
தசவதாரத்தின் ஏழாவது அவதாரமான
ராம அவதாரம்
இராவணனை அழிப்பதற்காக திருமாலால்
எடுக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
மனிதன் குழுக்களாக
இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்து வாழ்ந்தமையை ராம
அவதாரம் குறிக்கிறது

பலராம அவதாரம் –
(விவசாயம் செய்யும் மனிதன்)
-----------------------------------------------------
தசவதாரத்தின் எட்டாவது அவதாரம்
பலராமர். கிருஷ்ணனின் அண்ணனாக
திருமால் அவதரித்தாக புராணம் கூறுகிறது.
பலராமர் கைகளில் ஏர் கலப்பை விவசாயம்
செய்யும் மனிதனை குறிக்கிறது.

கிருஷ்ண அவதாரம் –
(கால்நடைகளை மேய்க்கும்
மனிதன்)
------------------------------------------------
தசவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம்
கிருஷ்ணவதாரம். கிருஷ்ணன் கம்சன் எனும்
அரக்கனை அழிக்க அவதரி்த்ததாக
புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன்
ஆடுகளையும், மாடுகளையும் மேய்க்கும்
சிறுவனாக
இருந்தது கால்நடைகளை தங்களின்
வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட
மனிதர்களின் பரிணாமத்தினை குறிக்கிறது.

கல்கி அவதாரம் - தசவதாரத்தின்
இறுதி அவதாரம் கல்கியவதாரமாகும்.
-----------------------------------------------------------------
கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும்
அவதாரமாக புராணம் கூறுகிறது
ஆயுதங்களும், வாகனமும் கொண்ட
அவதாரமான கல்கி தினம் தினம் சிந்தனையில்
வளர்ந்து கொண்டிருக்கும் மனிதன்
மகாசக்தியாக மாறுவதை குறிப்பதாகும்.

இந்துக்களால் போற்றப்படும் விஷ்ணுவின் தசாவதாரம் டார்வினிஸத்துடன் ஒத்துப் போகிறது.

தசாவதாரத்தை கருத்தில் கொள்ளும் போது டார்வின் வகுத்தளித்த கருத்துகள் முன்னமேயே இந்திஸத்தில் போதிக்கப்பட்டு வந்துள்ளது விளங்கும்.

முக்கிய வளர்ச்சி பருவத்தைக் கொண்டு முதல் 5 அவதாரங்களின் உருவ அமைப்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு தாய் தந்தை இல்லை. ஒவ்வொரு அவதாரத்திற்கும் நான்கு கைகள்(வாமன அவதாரத்தை தவிர). அவ்விலங்கு பருவங்கள் நான்கு கால் உயிரினங்கள்.

வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

முதல் அவதாரம் : மச்ச அவதாரம் (மீன்)
வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இரண்டாம் அவதாரம்: கூர்மம் (ஆமை)

நீரிலிருந்து நிலத்தில் நடப்பவை (amphibians) வளர்ச்சி 100 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

மூன்றாம் அவதாரம் : வராகம் (பன்றி) : தரையில் வாழும் பாலூட்டி விலங்கு (mammals) 60 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை.

நான்காவது அவதாரம் : நரசிம்மம் (மனித உருவில் உள்ள சிங்கம்) : பாதி மனிதன் பாதி சிங்கம் 30 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை

ஐந்தாவது அவதாரம்:வாமன (குள்ளமான கரடி) Homo Erectus : ஆயுதம் அற்ற இரண்டு காலில் நடக்கும் உருவம். காலம் 5மிலியன் முதல் 2மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இந்த ஐந்து அவதாரங்ளுக்கு அடுத்து வரும் 5 அவதார தத்துவங்கள் மனித இனத்தின் படிபடியான நாகரீக வளர்ச்சியை விளக்குவதாகும். ஆதிகால மனிதன் முதலில் நிலத்தை உழுது பயிரத்தெரிந்து கொண்டான் இது பரசுராம அவதாரம்.[ Homo Sapiens (350,000-100,000 years ago)] ஏற்கலப்பையுடன் இருப்பது காண்க.

பின்னர் ஆடுமாடுகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்த கற்றுக்கொள்கிறான். இது கிருஷ்ணவதாரம்( மாடு மேய்ப்பவர்.)

இறுதியில் சமுதாய ஆட்சிமுறை அதை பலப்படுத்த போர் பயிற்சி பெற்றார்கள் மனித பரம்பரையின் வளர்ச்சி சரித்திரம். பிற்பட்ட அவதாரங்களின் விளக்கம்.

இராம அவதாரத்தில் துணைப்பாத்திரமாக அதி புத்திசாலியாகவும், பலம் பொருந்திய அனுமன் (குரங்கு) சித்தரிக்கப்பட்டது ஏன் ? இதை பரிசீலிக்கும் பொழுது முதல் ஐந்து அவதாரங்கள் முன்பே வெளிப்படுத்த பட்ட பின்னரே அடுத்த அவதாரங்கள் விளக்கப்படுகின்றன. அந்த விளக்கத்தின் போதே சிங்கத்திலிருந்து மனித உருவம் தோன்றவில்லை குரங்கினத்திலிருந்தே மனித இனம் தோன்றியது இதை முக்கிய தகவலாக இடை செருகப்பட்ட முக்கிய கதாபாத்திரமே அனுமன் எனவிளங்கிக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக