தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

சித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்




சித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்
••• செவ்வாய் எனப்படும் கிரகம் பற்றிப் புலிப்பாணி என்னும் சித்தர் தமது பாடலில்,
‘‘கரிக் காற்று தாம் பரவ
தகைவாயிரும்புத் தாது துருபடர
செம்மை வர்ண கோளே மங்களமாம்’’ என்றார்.
••• அண்மையில் இதன் பொருளை விளக்கி NASA என்னும் அமெரிக்க வான்வெளி ஆய்வு மையம் தமது ஆராய்ச்சியின் முடிவைக் கூறியுள்ளது. தாது துருபடர என்பதற்கு IRON OXIDE என ஆங்கிலத்தில் பொருள்படுகிறது. இதனாலேயே செவ்வாய்க் கிரகம் சிவந்த மேனியைத் தாங்கி நிற்கிறது. செவ்வாய்க் கிரகத்தின் மேல்பரப்பில் கரியமில வாயு படர்ந்திருக்கின்றது என விண்வெளி ஆய்வாளர்கள் கூறுவது புலிப்பாணி சித்தரின் கருத்தை ஆமோதிக்கின்றது.
••• ‘‘நீராவியே நிறைந்து பரவ
மண்டலத்து அழுத்தமது சற்றேயிக்
காலங் குன்ற நரர் நிலைக்க
நிலையிலையே ’’ என்றார் மூலர்.
••• தண்ணீரானது ஆவி வடிவாகப் பரந்து உள்ளதாம். காற்று மண்டலத்தின் அழுத்தம் வெகுவாகக் குறைந்துள்ளதாம். இதனால் மனிதர்கள் முன்போல் வாழ வகை இல்லாது போயிற்று என்று பேசுகின்றார், மூலர் என்ற சித்தர். ATMOSHPHERIC PRESSURE குறைந்தமையில் மனிதர் தற்காலம் வாழ முடியாத நிலை என்பதில் இருந்து இதற்கு முன் மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள். பின்பு காலப்போக்கில் அழிவு ஏற்பட்டிருக்கிறது எனப் பொருள் கொள்ளலாம். இதனையே இன்றைய விஞ்ஞானிகள் பேசுகின்றனர். தண்ணீர், வாயு வடிவில் விளங்குகின்றது என்ற சித்தரின் ஆய்வை, விஞ்ஞானம் ஒத்துக்கொள்கின்றது.
•••மூலர் மேலும்,
‘‘பூவுலகு தமக்கு நிற்கும்
பிராண வலை மறைந்து நிற்க_பரிதியளி
பாசானம் படைத்ததன்றோ----_பாங்காய்,
நீரும் கட்டியாகி புவியடி ஆவியடு
கலந்துரையாட கண்டோமே’’
•••என்ற பாடல் சற்று ஆய்ந்து நோக்கத்தக்கது. நமது பூமியைச் சுற்றி OZONE என்ற வலை_பிராணவலை_சூரியனிலிருந்து வரும் நச்சுக் கதிர்களை வடிகட்டி, பூமிக்கு அனுப்புகின்றது.
இந்த வலை செவ்வாய்க் கோளில் இல்லை. எனவேசூரியக் கதிர்கள் நச்சுத் தன்மை பொருந்தியதாக உள்ளன. பூமிக்கு அடியில் பனிக்கட்டியும், குளிர்ந்த நீராவியும் உண்டு என்ற சித்தர் கூற்றை விஞ்ஞானம் இந்நாளில் உண்மை என மெய்ப்பிக்கின்றது.
•••சோதிடக் கலையில் செவ்வாய் பின்நோக்கிச் சில காலங்களில் செல்லும். இதை விஞ்ஞானம், ‘பூமி செவ்வாயைவிட வேகமாக சில காலங்களில் சஞ்சாரம் செய்கையில், செவ்வாய் பின்நோக்கிச் செல்வது உண்மை’ என ஒப்புதல் தருகிறது.
‘‘புவியினும் நாழியன்று கூடியே
நாளன்றென கணக்காம் குஜனே’’ _
என்ற போகர் வாக்கியம், ஒரு நாள் 24 மணி நேரமும் 30 நிமிடமும் சேர்த்தே செவ்வாயில் நடைபெறுகிறதாம்.
‘‘துவியாண்டின் புவிக்கு மண்டலமே
குன்ற குஜனுக்குற்ற வேக ஆண்டாம்’’
என்ற பாடல் வரி வாயிலாகச் செவ்வாயில் ஒர் ஆண்டுக்கு 687 நாட்கள் என தெரிகின்றது.
காக புஜண்டர் தமது ஜீவ நாடியில்
‘‘புவிக்கு மதியிடையே பகுதி
மண்டல சதச்சத மிலேச்சமென
கண்டோமே - சுங்கனுக்கு வகுரந்த
தொலையும், பான் கூடியே மங்களமாகி
நிற்ப_ வைரிபோல் புவிக் கெதிர்
யமையும் குஜனார் துவிச்சத பஞ்சபான்
தாட்டைத் தொலையுமாம் தூரமே’’
•••என்ற செய்யுளின் மூலம் விஞ்ஞானத்திற்கு எவ்விதத்திலும் குறைந்த ஞானம் கொண்டவர்கள் அல்லர் நமது சித்தர்கள் என்பது புலனாகின்றது.
••• பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவு இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மைல்கள் என்கின்றார். சுக்கிரனுக்கும், பூமிக்கும் இருப்பது 24 ஆயிரம் மில்லியன் மைல்கள் எனவும், செவ்வாய்க் கிரகம் பூமியிலிருந்து 34ஆயிரம் மில்லியன் மைல்கள் எனவும் கணக்கிட்டுக் கூறுகின்றார், சித்தர். மேலும் பூமியும், செவ்வாயும், எதிரெதிர்க் கோணத்தில் நிற்கின்றன என்றும், பூமியும், செவ்வாயும் சூரியப் பாதையை 249 மில்லியன் மைல் தூரம் கடக்கின்றன என்றும் ஞானிகள் பேசுவதை விஞ்ஞானம் ஆராய்ந்து எவ்வித மறுப்பும் கூறாது ஏற்றுக்கொள்வது வியப்புக்குரியது அன்றோ.
••• ‘‘மங்களத்திற்கேது யீர்ப்புக் காந்தம்யிருப்பினு மீர்ப்பு மூன்றிலொன்றே’’ என்ற திருமூலர் வாக்கிலிருந்து
செவ்வாய்க் கிரகத்திற்கு விகிநிழிணிஜி¬மிசி திமிணிலிஞி என்பது இல்லை என்றும், புவி ஈர்ப்பு விசையில், மூன்றில் ஒரு பகுதியே செவ்வாயில் உறைகின்றது என்றும் இந்தப் பாடல் வழி உணரலாம். இது இன்றைய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவை ஒத்திருப்பது கண்டு நமக்கு வியப்பு மேலிடுகின்றதன்றோ?
••• கோரக்கர் எனும் சித்தர் சில கூற்றுக்களை விஞ்ஞானத்துக்குப் புறம்பாகக் கூறுவதை இப்பாடலில் நாம் காணலாம்.
‘‘உண்டு வுண்டு ஜீவராசிகள்
உண்டு மங்களமான கோளில் மங்களவுயிருண்டு
கண்டோமே ஆங்கிருந்து நோக்க ஒழிந்தது
நீருங் கடலுமேக வுயிரினமுமேய
தொப்ப மறைத்தானிறைவன் மங்களத்துறை ஜீவராசி தமையே’’
••• என்ற இப்பாடலைக் கூர்ந்து கவனிக்க, செவ்வாய்க் கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், பூமியில் உள்ள தாவர இனமோ, கடல்களோ, நதிகளோ தென்படவில்லை. இதனால்பூமியில் தாவர இனங்கள் இல்லை. நீர் வளங்கள்இல்லை எனச் சொல்லமுடியாது. அதுபோல இங்கிருந்து ஏவப்பட்ட கருவிகள் தமது பணியைச் செய்வதில் காணப்படும் குறைபாடு அங்கு உயிரினங்களைக் காட்டத் தவறிவிட்டது. அங்கும் ஜீவராசிகள் இருப்பதைக் கண்டோம் என்கின்றார் சித்தர். ஒருசில விஞ்ஞானிகள், செவ்வாய்க் கிரகத்தில், உயிரினங்கள் இருக்கலாம் என ஒத்துக்கொள்வது நம் முன்னோர்களின் ஞானத்தைக் கண்டு நம்மை வியக்க வைக்கிறதன்றோ.
••• பூமியைப் போன்றே செவ்வாய்க் கிரகத்திலும் துருவங்களைப் பனிப்படலம் மூடி இருக்கின்றது என்கின்றார் கொங்கணர். இவர் சூடான திட நிலையில் செவ்வாய்க் கிரகத்தின் அடியில் தண்ணீர் இருக்கிறது எனவும், தூசிப்புயல் சிற்சில சமயம் வீசுகின்றது என்றும், தென்துருவத்தில் நிற்கும் பனிக்கட்டிகள் சூரிய வெப்பத்தினால் உருகிவிட்டால், செவ்வாய்க் கிரகமே தண்ணீரில் மூழ்கி, முப்பத்தாறு அடி உயரம் தண்ணீர் தேங்கி, செவ்வாய் மண்டலத்தையே மூடிவிடும் என்றும் கொங்கணர் தமது பாடலில் விவரிக்கின்றார்.
‘‘ தூசே வானாகி நிற்க உறை
நீரும் வெம்பி உறையுள் காண
தட்சிணத்து மூடிநிற்கும் பனி
யுருகி நிற்ப துவிபாஞ்சதுர் முழ
முயர நீராகிப் போக அஞ்சீர்’’
••• என்றார். தூசு புயல் தட்டுகிறது. 24 முழ உயரம் தண்ணீர் செவ்வாய்க் கிரகத்தையே மூடும் வண்ணம் பனிப்பாறை இருக்கின்றது என்ற செய்யுளை இன்றைய விஞ்ஞானிகள் உண்மை, உண்மை என்று வரவேற்கின்றனர் என்றால், விஞ்ஞானத்தை வென்றது மெய்ஞானமும்,அதனை ஆக்கிய சித்தர்களுமே என்பதில் ஐயமில்லை.
==============================================
Source Taken from : kaviyam.in ஆகஸ்ட் 2013, மாத இதழ்
===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக