தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 ஆகஸ்ட், 2014

முதுமையில் டிமென்ஷியாவைத் தடுக்கும் விற்றமின் D !

போதியளவு விற்றமின் D ஊட்டச்சத்தை பெறாத முதியவர்களுக்கு டிமென்ஷியா, அல்சைமர்ஸ் முதலான நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு அதிகமென ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நரம்பியல் அக்கடமியின் வெளியீடாக அமைந்துள்ள நியூரலொஜி என்ற சஞ்சிகையில் ஆய்வின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
விஞ்ஞானிகள் 65 வயதிற்கு மேற்பட்ட ஆயிரத்து 658 பேர் தொடர்பான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதில் குறைந்தளவு விற்றமின் D ஐப் பெற்ற முதியவர்கள் மத்தியில் டிமென்ஷியா நோய் ஏற்படும் அபாயம் 53 சதவீதமாக காணப்பட்டது.
தீவிர விற்றமின் D பற்றாக்குறையை எதிர்கொண்ட முதியவர்கள் மத்தியில் நோய் அபாயம் 125 சதவீதமாக காணப்பட்டதென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக