தற்போதைய சமூகத்தில் எந்தவித ஆசையும் இல்லாமலும் ஒருவர் இருக்கலாம் ஆனால் காதல் ஆசை இல்லாத மனிதன் யாரும் இல்லை, குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தியேட்டர், பீச், கோவில், பார்க் என திரும்பிய பக்கம் எல்லாம் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றன. நீ தான் என் உயிர், உனக்காக உயிரையும் கொடுப்பேன் போன்ற வசனம் எல்லாம் பேசி இறுதியில் 90% காதல் தோல்வியில் தான் முடிகிறது, பிறகு வாழ்க்கையை வெறுத்தது போல் இருப்பது. இப்படி உயிருக்கு உயிராக காதலித்து பின் தோல்வியில் முடிவதை படத்தில் கூட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் காதல் தோல்வியை வைத்தே ஹிட் கொடுத்த படங்களின் தொகுப்பு தான் இந்தப் பகுதி.
தேவதாஸ்
காதல் தோல்விக்கெல்லாம் குருநாதர் என்றால் இவர் தான். இந்தப்படத்தில் தன் காதலியை பிரிந்து வாடும் இளைஞனாக ஹிந்தி நடிகர் தீலிப் குமார் வாழ்ந்திருப்பார். இப்படம் ஒரு பெங்காலி படம் என்றாலும் காதல் தோல்வி படங்களில் இருந்து இதை தவிர்க்க முடியாது.
புன்னகை மன்னன்
80களில் காதல் இளவரசனாக வளம் வந்த கமல்ஹாசன், தன் முதல் காதலியுடன் சேர முடியாத காரணத்தால் இருவரும் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சிப்பார்கள், இதில் காதலி சாக, கமல் உயிருடனே நரக வேதனையை அனுபவிப்பார், பின் இரண்டாம் காதலும் சேர்வது போல் சேர்ந்து பிரிவது தான் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி.
இதயம்
அட சீக்கிரம் அந்த லெட்டர குடுப்பா... அப்படின்னு தியேட்டர்ல இருந்தவங்கலே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்கன்னா பார்த்துங்கோங்களே! ஒரு காதல் கடிதத்தை தன் காதலியிடம் கொடுக்காமல் கடைசி வரைக்கும் ரசிகர்களை டென்ஷன் மூடிலேயே வைத்து வெற்றி பெற்றார் முரளி.
சேது
தமிழ் சினிமாவின் காதலையே புதிய தளத்தில் காட்டிய காதல், அடிதடி செய்யும் முரடனின் மனதில் ஒரு ஐயர் பெண் என்று ஆரம்பமே அசத்தலாக்கி, பின் ஒரு பெரிய பிரச்சனையால் காயமடைந்து சித்தம் கலங்கி இருப்பார் கதாநாயகன், பின் மீண்டும் புது மனிதனாக தப்பித்து தன் காதலியை பார்க்க வரும் இடத்தில் அவளின் பிணத்தை பார்த்து மறுபடியும் மனநல காப்பகத்துக்கே செல்வது எல்லோர் மனதையும் உறைய வைத்துவிட்டது.
காதல்
ஏழ்மையில் வாழும் இளைஞன் வசதி படைத்த பெண்ணின் மீது காதல், பின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம், அதை தொடர்ந்து இனிமையாக ஆரம்பிக்கும் திருமண வாழ்க்கை என சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில், தேடி கண்டுபிடித்து அவர்கள் காதலை பெண் வீட்டார் பிரிக்க, கதாநாயகன் மனநிலை பாதிக்கப்படுகிறார். இதை இயக்குனர் சொன்ன விதத்தை விட, உண்மைக்கதை என்று போடும் போது தான் ஒரு நிமிடன் எல்லோருக்கும் கண் கலங்கிவிட்டது.
பூவே உனக்காக
படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞனாக விஜய், அவருக்கு உதவி செய்யும் ஒரு பெண்ணை காதலிக்க பின் தான் தெரிகிறது அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்று. ஆனால் வழக்கம் போல் அந்த பெண்ணை பழி வாங்காமல் அவள் காதலையும் சேர்த்து வைப்பார். காதல் தோலிவியையும் இத்தனை பாசிட்டிவாக முடித்து சாதித்தார் இயக்குனர்.
முகவரி
தான் எப்படியாவது இசையமைப்பாளாராக வேண்டும் என்று கடுமையாக உழைக்கு இளைஞனாக அஜித், தன் முன்னேற்றத்திற்கு உறுதுனையாக வரும் ஜோதிகாவை காதலிக்க, பின் அந்த காதலே அவர் குறிக்கோளிற்கு தடையாக நிற்க, இருவரும் மிகவும் எதர்த்தமாக பேசி பிரிவார்கள். வாழ்வை பிராக்டிக்கலாக பார்க்கு ஒவ்வொருவருக்கு இப்படம் நல்ல உதாரணம்.
7/ஜி ரெயின்போ காலனி
தெருவில் சண்டை போட்டு திரியும் கல்லூரி மாணவனுக்கு, தன் வீட்டில் குடி வரும் அழகான ஒரு பெண்ணின் மீது காதல், இவனைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கும் அவள் ஒரு கட்டத்தில் இவன் மீது காதல் கொள்கிறாள். ஒரு விபத்தில் அவள் இறக்க, இவனும் தற்கொலைக்கு முயற்சி செய்ய, உடனே உள் உணர்வாக அவள் தோன்றி அதை தடுத்து நிறுத்துகிறாள். பின் தன் வாழ்வில் பெரிய இடத்தை அடையும் அவன், தன் காதலி உயிரோடு இருப்பதாகவே நினைத்து வாழ்கிறான்.
விண்ணைத்தாண்டி வருவாயா
இப்படம் அப்படியே 21ம் நூற்றாண்டு காதல், தன்னை விட 1 வயது பெரிய பெண்ணை காதலிக்கும் கதாநாயகன், வேண்டாம் வேண்டாம் என்று விலகி சென்றாலும் ஒரு கட்டத்தில் அவளுக்கும் காதால் வர, பின் தன் குழப்பமான மனதால் காதலை தூக்கி எறிகிறாள். இப்படத்தில் ஒரு பெண்ணின் மனநிலையை மிக அழகாக காட்டியிருப்பார்கள்.
அட்டக்கத்தி
இதுவரை வந்த அத்தனை காதல் படங்களிலும் எதார்த்தம் இது தான் என்று சொன்னாலும், உண்மையாகவே எதார்த்தத்தை இந்த படத்தில் தான் சொல்லியிருப்பார்கள். காதல் தோல்வி என்றாலே தாடி வைக்க வேண்டும், கையை கிழிக்க வேண்டும் என்ற லாஜிக்கெல்லாம் உடைத்தெறிந்து, மறுபடியும் மற்றொரு பெண்ணை காதலிக்க தொடங்கும் ஹீரோ என இந்த கால ஆண்களின் மனநிலையை அப்படியே காட்டியிருப்பார் இயக்குனர்.இது மட்டுமின்றி எத்தனையோ படங்களில் காதலின் வலிகளை பற்றி சொல்லியிருப்பார்கள், அதில் சில படங்களின் தொகுப்பை தான் நாம் பார்த்தோம். இதேபொல் உங்கள் மனதை பாதித்த படங்களை கூட கமண்டுகளில் தெரிவிக்கலாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/article/107172/#sthash.cwf0blbJ.dpuf











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக