நம் முன்னோர்கள், அந்த காலங்களில் பெண்களை சத்தமாக சிரிக்க விடமாட்டர்கள், அதுவும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களின் முன்னால் உட்காரக்கூடாது, சத்தமாக சிரிக்க கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு இருக்கும்.
ஆனால், பெண்களின் சிரிப்புக்கென்றே ஒரு தனிமதிப்பு இருக்கிறது.
எல்லா துன்பங்களையும் சகித்துக்கொண்டு பெண் சிரிக்கிறாள் ஏன்?
இயற்கை பெண்ணுக்கு அதற்கான தனித்திறனை வழங்கி இருக்கிறது என்பது தான் ஆராய்ச்சியாளர்களை புருவம் விரிய ஆச்சர்யப்பட வைக்கிறது.
சின்னச்சின்ன வேடிக்கை நிகழ்வுகள், நகைச்சுவைகளுக்கு எல்லாம் ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கிறார்கள்.
அதிலும் சிரிப்பதில் பெண்களுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. கலகலவென்று சத்தமாக சிரிப்பது பெண்களின் இயல்பு. கண்களில்நீர் வரும் அளவிற்கு கூட அவர்கள் சிரிப்பது உண்டு.
ஆண்கள் பொதுவாக சாதாரணமான விடயங்களுக்கு எல்லாம் அதிகமாக சிரிக்க மாட்டார்கள்.
பெண்கள் ஏன் இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பெண்களின் மூளையின் "கார்டெக்ஸ்" பகுதிக்கு முந்தைய அடுக்கு அதில் முக்கியப் பங்காற்றுவது தெரிய வந்துள்ளது.
அதனால்தான் பெண் துன்பத்திலும் சிறிய விஷயம் சந்தோசம் அளிக்கும் என்றால் துன்பத்தை மறந்து வாய்விட்டு சிரிக்கிறாள். இது இயற்கை அவளுக்கு வழங்கி இருக்கும் தனித்திறன்.
பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தம்மை முன்னிலை படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருக்கும்.
ஆனால் பெண்களின் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகத்தான் உள்ளது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக