சண்டே வந்தாச்சு...என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கீங்களா...இதோ உங்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி மட்டன் கிரேவி
தேவையானவை
மட்டன் - 1 கிலோ மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் வெங்காயம் - 2 (பெரியது ) தக்காளி - 1 (பெரியது ) தனி மிளகாய் தூள் - 1 / 2 டீஸ்பூன் மிளகு தூள் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி தழை - நறுக்கியது 2 டீஸ்பூன் கருவேப்பிலை - தேவையான அளவு
வறுத்து- அரைத்து கொள்ள ஏலக்காய் - 2 பட்டை - 1 கிராம்பு - 2 பெருஞ்சீரகம் - 1 / 2 டீஸ்பூன் கடுகு - 1 / 2 டீஸ்பூன் மிளகு - 5
செய்முறை
குக்கரில் தண்ணீருடன் மட்டன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 6 விசில் வரும் வரை வேகவிடவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
இதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள்(1 டீஸ்பூன் மட்டும்) தக்காளி, வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கவும்.
மட்டனை வேகவைத்த தண்ணீரை (கிரேவிக்கு தேவையான அளவு) சேர்த்து மிதுவான வெப்பத்தில் நன்கு கொதிக்க விடவும்
வதங்கிய பிறகு கொத்தமல்லி தூவினால் சுவையான கிரேவி ரெடி...
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக