மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை இரத்த பரிசோதனை மூலம் முன்னரே கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதனை Johns Hopkins பல்கலைக்கழத்தைச் சேர்ந்த Zachary Kaminsky என்பவர் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு கண்டறிந்துள்ளது.
SKA2 எனப்படும் மரபணு மன அழுத்தங்களை ஏற்படுத்துகின்றதும், மூளையில் காணப்படுவதுமான ஹோர்மோனை கையாள்கின்றது.
இதன் தொழிற்பாடு அற்றுப்போகும் நிலையிலோ அல்லது மந்தம் அடையும் நிலையிலோதான் மனிதர்கள் தாமாகவே தற்கொலைக்கு முயற்சிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 325 வகையான இரத்த மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் 80 சதவீதம் உறுதியாகியுள்ளது.
இப்பரிசோதனைக்காக பங்குபற்றியவர்களில் 96 சதவீதமானவர்கள் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக