தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

லண்டனுக்கு ஜாலி ட்ரிப்!!!


ஆங்கில எழுத்து வரிசையில் முதலில் தொடங்கும் A-யை போன்று, எண்வரிசையில் தொடங்கும் முதல் எண் 1-யை போன்று சரித்தரம் படைத்த பல நாடுகளுள் முன் நிற்பது இங்கிலாந்தே என்றால் அது மிகையாகாது.
இங்கிலாந்து என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது பக்கிங்காம் அரண்மனை தான்.
வரலாற்று புகழ்பெற்ற இந்த மாளிகை தான் அந்நாட்டின் அரச பரம்பரையினர் வாழும் இடம்.
இங்கிலாந்தின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
லண்டனை பார்த்து ஒரு மனிதன் சோர்வுற்றானேயானால், அவன் தன் வாழ்க்கையிலேயே சோர்வுற்றவனாவான்.
ஏனெனில் வாழ்க்கைக்கு வழங்கும் அத்தனை அம்சங்களும் லண்டனில் உள்ளன, வாங்க லண்டனை சுற்றி பார்ப்போம்…
பிரிட்டிஷ் மியூசியம்(British Museum)
இது கிரேட்ரஸெல் செயின்ட் புளூம்பரியில் உள்ளது, பல அபூர்வ பொருட்கள் கொண்ட காலரியில் அடங்கிய பிரிட்டிஷ் மியூசியத்தை பார்க்க ஒருவார காலம் தேவைப்படும்.

பக்கிங்ஹாம் அரண்மனை(Buckingham Palace)
இந்த அரண்மனையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வசிக்கின்றனர், இது அந்நாட்டு ராணியின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு.
600 அறைகளை கொண்ட இந்த அரண்மனை ராணி ஊரில் இல்லாத போது மட்டுமே பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படும்.
காவலர்களின் பணிமாற்றம் ஒவ்வொரு நாள் காலை 11.30 மணிக்கு நிகழும், இது பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி.

ஹாம்டன் கோர்ட்(Hampton Court)
500 ஏக்கரில் இயற்கை நிலத்தோற்றமுடைய பூந்தோட்டங்களும், பிரசித்தி பெற்ற பெரிய திகைப்பூட்டுகிற புதர்களும் நிறைந்த இடம்.
200 ஆண்டுகளுக்கு அரசரின் அரண்மனையாக இருந்த இது எட்டாம் ஹென்றியும், அவரது 6 மனைவிகளில் 5 பேர் தங்கியிருந்த இடமும் கூட. லண்டனிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

நேஷனல் காலரி(National Gallery)
13 முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பெரிய கலைப் பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் அடங்கிய கேலரி.

செயின்ட் பால் கதீட்ரல்(St. Paul's Cathedral)
இது 17ம் நூற்றாண்டின் சர் கிரி டபர் ரென் அவர்களின் சாதனை. இவரது உடல் பூமியின் கீழே ஓர் அறையில் புதைக்கப்பட்டுள்ளது.
இது திஸிடி என்றழைக்கப்படும் வால் ட்ரீட் போன்ற பகுதியில் அமைந்துள்ளது.
இதன் மிகப்பெரிய கோபுரம் போன்ற கூரையிலிருந்து ஒரு சுற்று சுற்றி வந்தால், இலண்டன் மாநகரின் அற்புதமான தோற்றத்தை பார்த்து ரசிக்கலாம்.

லண்டன் கோபுரம்(Tower of London)
வரலாற்றில் கிடைத்த அரிய சான்றுகள் இங்கு காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.
எதிரிகளிடமிருந்து லண்டன் நகரத்தை காப்பாற்றுவதற்காக கிபி 1070ம் ஆண்டுகளில் லண்டன் கோபுரம் கட்டப்பட்டது.
சுமார் 20 கோபுரங்களின் தொகுப்பாக இந்த கட்டிடம் அமைந்துள்ளது. அரசர்களுக்கு சொந்தமான ஆடை- ஆபரணங்கள், அரசர்கள் உபயோகித்த ஆயுதங்கள், இங்கிலாந்தில் நடைபெற்ற போர்கள் குறித்த சான்றுகள், போர்களில் பல நாடுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 

விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் பொருட்காட்சி(Victoria and Albert Museum)
உலகத்திலேயே பெரியதான, அலங்காரமான கலைப்பொருட்காட்சி இது. உலகத்தின் எல்லா பாகங்களில் இருந்தும், எல்லாக் காலத்து கலைகளும் சேர்ந்தவை இவை.

பிக்பென்(Big Ben)
லண்டன் நகரின் அடையாளங்களும் ஒன்று பிக்பென் கடிகாரம்.
முதலில் டீபன் கோபுரம் என்ற அழைக்கப்பட்ட இந்த கட்டிடம் இங்கு நிறுவப்பட்ட பெரிய மணியின் அடையாளமாக பிக்பென் கடிகாரம் என்ற சிறப்பு பெயர் பெற்றது.
பிரிட்டிஷ் பாராளுமன்றம் இரவில் நடந்தால், அதனை குறிக்கும் விதமாக இந்த கோபுரத்தின் உச்சியில் உள்ள விளக்கு எரிய விடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக