சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த துகள் கடவுளின் துகள் அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜெனிவாவில் உள்ள ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் கடந்த 2012ம் ஆண்டு யூலை மாதம் 4ம் திகதி, தங்களது நீண்ட கால ஆராய்ச்சியின் முடிவில் கடவுளின் துகள் என்றழைக்கப்படும் ஹிக்ஸ் போசம் என்னும் துகளை கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியதாக அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று என்று அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த துகள் உண்மையில் கடவுளின் துகள் அல்ல, வேறு ஏதோ ஒன்று என்கிற கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது.
மேலும், செர்ன் மையத்தின் விஞ்ஞானிகள் கூட கடவுள் துகள் கண்டுபிடிப்பு பற்றிய தங்கள் கருத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதனை வலுவாக்கும் விதமாக ஐதராபாத்தைச் சேர்ந்த பி.எம். பிர்லா அறிவியல் மைய இயக்குனர் சித்தார்த், தனது சர்வதேச ஆய்வறிக்கை கட்டுரையில் மறுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரையில், வான்வெளியை நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் இயற்பியல் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை கடவுளின் துகள் என்பவை விண்வெளியில் மிகவும் புதிரானவை.
இது போன்ற துகள் எதுவும் இருந்தாலும் அவற்றை விண்வெளியின் புறப்பரப்பு உறிஞ்சிக்கொண்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக