தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 நவம்பர், 2014

மஞ்சள் காமாலையை விரட்டியடிக்கும் நார்த்தங்காய்!


பொதுவாக காய்கள் நம் உடல் அரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
அதிலும் காய் வகைகளில் ஒன்றான நார்த்தங்காயை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
இந்த நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. மேலும் நார்த்தங்காயின் வேர், மலர் மற்றும் கனிகளும் பயன்கொண்டவை.
நார்த்தங்காயின் மகத்துவங்கள்
வாத‌ம், பி‌த்த‌ம் நீங்கும். வாயு‌ப் ‌பிர‌ச்‌னை இருந்தால், ஒரு நார்த்தங்காய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல்போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌ன்றா‌ல், வாயு‌க் கோளாறு உடனே சரியாகும்.
நா‌ர்‌த்த‌ங்கா‌ய் பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சியை தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.
நா‌ர்‌த்த‌ங்கா‌ய் பழத்தின் சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
நா‌ர்‌த்த‌ங்கா‌ய் பழத்தை சாறை பிழிந்து எடுத்து அதை வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் கொழுப்பு குறையும்.
மனிதனின் ஆயுளை அதிகரிப்பதில் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் பெரும் பங்கு வகிக்கின்றது.
நார்த்தங்காய் குழம்பு
பாதி நார்த்தங்காயை நறுக்கிச் சாறு பிழிந்து அரை ஸ்பூன் உப்புப் போட்டு தனியாக வைக்கவும்.
மீதி நார்த்தங்காயை பொடிப்பொடியாக நறுக்கி, கல் சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், வெந்தயம், துவரம்பருப்பு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, புளியைக் கரைத்துவிட்டு பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பிறகு இறக்கி, நார்த்தங்காய்ச் சாறை விடவும். கடைசியில் கறிவேப்பிலைபோட்டு இறக்கவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்தக் குழம்பு சேர்த்துச் சாப்பிடலாம்.
பயன்கள்
வ‌யி‌ற்று‌ப் புழு, வயிற்று புண்ணைப் போக்கும். மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவும். ரத்தம் சுத்தமடையும்.
‌க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் வாய்க் கசப்பு, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.
நார்த்தங்காய் ஊறுகாய்
வாணலியில் நார்த்தங்காயை போட்டு சிறிது எண்ணையும், தண்ணீரும் ஊற்றி மிதமாக வேக வைக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய நார்த்தங்காய் துண்டுகளுடன் உப்பு போட்டு நன்கு குலுக்கவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு கருவேப்பிலை,பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். சிறிது மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
பின்னர் ஊறிய நார்த்தங்காயை சேர்க்கவும்.ரெடி செய்த பொடியை சேர்த்து சிறிது நேரம் சிம்மில் வைத்து வேக விட்டால் நார்த்தங்காய் ஊருகாய் ரெடி.
பயன்கள்
சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலோ அல்லது ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலோ, நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ண்ணா‌ல் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கிவிடு‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக