தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 நவம்பர், 2014

வாவ்! வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து ஒரு தகவல் (வீடியோ இணைப்பு)


வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து பெறப்பட்ட முதல் மற்றும் கடைசி தகவல் “வாவ்”.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 1977ம் ஆண்டு, ஒரு கோடைகால இரவில் ஆய்வகத்தில் ஜெர்ரி எஹ்மான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது கணினியில், வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒரு ரேடியோ சிக்னல் பதிவானது.
அந்த சிக்னல்(தகவல்/சமிக்ஞை) 72 நொடிகளுக்கு தொடர்ந்து கிடைத்தது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்வால் திகைப்படைந்த ஜெர்ரி உடனே அந்த சிக்னலை, செய்தியாக கணினியின் உதவியுடன் பரிமாற்ற தொடங்கியுள்ளார்.
அதாவது நமது பூமியில் வாழும் உயிரினங்களால் அனுப்பபடாத, நம் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து பெறப்பட்ட ஒரே தகவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சமிக்ஞை எங்கிருந்து, எவரால், என்ன காரணத்திற்காக அனுப்பபட்டது என்பது பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அதனை மொழிமாற்றம் செய்து படிக்க முயன்றுள்ளனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து போராடி அந்த சிக்னலை மொழி பெயர்த்த போது, அதன் மூலம் அறியப்பட்ட வார்த்தை “வாவ்”.
இந்த தகவல் டௌ சகிட்டரீ(Tau Sagittarii), என்ற நட்சத்திரத்தின் சுற்றுப்புறத்திலிருந்து வந்ததாக பின்னர் கண்டறியப்பட்டத, மேலும் இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
1977ல் பெறப்பட்ட இந்த சிக்னலை தவிற இன்று வரை வேறு எந்த சிக்னலும் பெறப்படவில்லை.
ஒருவேளை வேறு எந்த சிக்னலும் அனுப்பபடவில்லையா அல்லது தகவல் அனுப்பப்பட்டு நம்மால் பெற முடியாமல் போனதா என்ற கேள்விக்கும் இன்றுவரை விடை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக