தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 நவம்பர், 2014

விண்வெளியில் இருந்து திரும்பி பூமிக்கு வந்த மனித DNA: அழியாமல் திரும்பியதில் அதிர்ச்சி !

சுவிஸ் நாட்டு விஞஞானிகள் ஒரு மாபெரும் பரிசோதனை ஒன்றை நடத்தி, அதிர்ச்சியான தகவலையும் வெளியிட்டுள்ளார்கள். மனித உடலை உருவாக்க மற்றும் மனிதனையே உருவாக்க ஏதுவாக அமைவது உடலில் உள்ள DNA மூக்கூறுகள் ஆகும். இவை விண்வெளிக்குச் சென்றால், அதிக வெப்பமடைந்தால் செயலிழந்துபோகும் என்ற கருத்துகள் பல காலமாக நிலவி வந்தது. ஆனால் இந்த பூமி தோன்றி மனிதன் மற்றும் ஏனைய விலங்குகள் வாழ ஏதுவான சூழல் ஏற்பட்டவேளை, விண் கற்கள் மூலமாகவே DNA போன்ற மூலக்கூறுகள் பூமியில் வந்து விழுந்தது என்றும், அதனூடாகவே பூமியில் உயிரினங்கள் தோன்றியது எனவும் சில விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்.
அப்படி என்றால் விண்வெளியில் DNA மூலக்கூறுகள் சஞ்சரித்தால் அவை செயல் இழந்துவிடுமா ? இல்லை உயிரோடு இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது அல்லவா ? இதற்கு விடைகாணவே விஞ்ஞானிகள்ஒரு ராக்கெட்டில், DNA மூலக்கூறுகளை மட்டும் பிரித்தெடுத்து விண்வெளிக்கு அனுப்பி, பின்னர் அதனை பூமியில் விழவைத்துள்ளார்கள். என்ன ஆச்சரியம் மனித DNA மூகக்கூறுகள் அப்போழுதும் செயல்படும் நிலையில் தான் இருந்துள்ளது. அது இறந்துவிடவில்லை. எனவே தற்போது விண்வெளியில் இருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டிற்கு வலு கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக