செல்பி எடுப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் செல்பி குறித்து ஓர் ஆய்வு வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்பி எடுப்பதில் யார் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் பெண்கள் தான். அதனால் தான் பெண்கள் அதிகமாக செல்பி எடுத்துக் கொள்கிறார்கள்.
அதன் மீது பைத்தியமாக உள்ள இவர்கள், தங்களது இயல்பைக் கடந்து மேம்பட்ட தோற்றத்தை வெளிக்காட்ட நினைக்கிறார்கள்.
பொதுவாக வேலைக்காக ஆட்களை தெரிவு செய்யும் போது சமூக வலைதளங்களில் பதிவாகி இருக்கும் செல்பிக்கள் மூலம் அவர்களின் இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள மேம்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
செல்பி எடுத்து வலைத்தளங்களில் பகிர்பவர்கள் ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாமல், வெளித்தோற்றத்தின் மூலம் மட்டுமே அனைத்தையும் எதிர்பார்ப்பவராக இருப்பர்.
எனவே செல்பி எடுப்பதை முடிந்த வரை குறைத்துக் கொள்வது நல்லது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக