இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் 0.2 வீதமானவர்கள் எச்.ஐ.வி.மற்றும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் வரையான காலத்தில் இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 132 என கண்டறியப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmxy.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக