இந்தியாவில் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ஸ்பைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஸ்பைஸ் எம்ஐ-430 ஸ்மார்ட்போன் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.
இதன் விலை ரூபாய் 4,399 என நிர்னயக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்பைஸ் எம்ஐ-430 ஸ்மார்ட்போன் 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே 480*800 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 256 எம்பி ராம் கொண்டுள்ளது.
மெமரியை பொருத்தவரை 2 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு டூயல் சிம் வசதியும் உள்ளது.
கமெராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 2 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1.3 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதோடு ஜிபிஆர்எஸ்/எட்ஜ், வைபை, ப்ளூடூத் மற்றும் 3ஜி வசதிகளோடு 1400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
இந்நிறுவனம் சமீபத்தில் ஸ்டெல்லார் 517 மற்றும் ஸ்டெல்லார் 470 ஸ்மார்ட்போன்களை ரூ.7,999 க்கு வெளியிட்டதோடு இரண்டும் டூயல்சிம் மற்ரும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக