தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 நவம்பர், 2014

வெடித்து சிதறிய விண்கற்கள்: வியக்க வைக்கும் காட்சி (வீடியோ இணைப்பு) !

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி விண்கற்கள் வேகமாக நெருங்கி வந்த வியக்கத்தக்க காட்சியை தெற்கு டக்கோடாவில் ஒரு புகைப்படக்காரர் படம்பிடித்துள்ளார்.தெற்கு டகோடாவில் கஸ்டர் என்ற இடத்தில் உள்ள காடுகளுக்கு வெஸ் (Wes Eisenhauer) என்ற புகைப்படக்காரர் குடும்பத்துடன் விடுமுறைக்காக சென்றிருந்தார். அப்போது பால்வெளி மண்டலத்தில் நடந்த ஒரு தெளிவான காட்சிகளை தனது கமெரா மூலம் இரவில் படம்பிடித்துள்ளார்.
இதுபற்றி புகைப்படக்காரர் வெஸ் கூறுகையில், கண்சிமிட்டும் நேரத்தில் விண்கற்கள் பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து, திடீரென வெடித்து சிதறியது. இந்த நிகழ்வின்போது, வளையத்துக்குள் தூசியை போன்ற ஃபிளாஷ் அடிப்பது போல் வானத்தில் தோன்றியது.
வானம் நம்பமுடியாத அளவிற்கு தெளிவாக மற்றும் எந்தவித ஒளி மாசும் இல்லாமல் இருந்ததால் எனது கமெராவை வெளியில் அமைத்து கிளிக் செய்துவிட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது.
மேலும் விண்கற்கள் வெடிக்கும் போது வினாடிக்கு 50 மைல்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என்றும், நான் இந்த மாதிரியான ஒரு அரிய வகை புகைப்படங்களை பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக