புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் காய்கறிகளான பூசணிக்காய், வெள்ளரிக்காயில் நிறைந்துள்ளதாக மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர்.
வெள்ளரி வகையை சேர்ந்த இந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அவற்றின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மருந்துகளில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இவர்கள் வெள்ளரி வகை காய்கறிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இக்காய்களில் பி.ஐ.பி.டி என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் சிறப்பு தன்மையுடன் உள்ளன. இவை "டி.என்.ஏ"வுடன் தொடர்பு கொண்டவை.
இவைகள், புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவைகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக