தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 நவம்பர், 2014

மாதவிடாய் நின்ற பின்பும் கர்ப்பம் !

மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன.ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்தி இருக்கும். ஆனால், பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு முட்டை உற்பத்தி நின்று விடும்.
மாதவிடாய் நின்றதும், கர்ப்பப் பை சுருங்க ஆரம்பிக்கும். அதை விரிவாக்க, ஹெச்.ஆர்.டி. எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுத்து, மாதவிலக்கை வரவழைப்பார்கள்.
பிறகு தானமாகப் பெற்ற கருமுட்டையை, ஐ.வி.எஃப் முறையில் கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, 3 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்து, பிறகு பெண்ணின் கருப்பையில் செலுத்தி வளரச் செய்வர்.
இந்த சிகிச்சையைச் செய்வதற்கு முன்பாக பல விடயங்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல், குறிப்பாக கர்ப்பப் பையின் ஆரோக்கியம், மற்றும் சிறுநீரகங்கள், இதயம் என எல்லாம் சீரான இயக்கத்துடன் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.
பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பின் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்கள் வயதானவர்களாக இருப்பார்கள் என்பதால், வயோதிகத்தின் காரணமாக இயல்பாக அவர்களது உடலில் ஒரு தளர்ச்சி இருக்கும்.
கர்ப்பத்தின் காரணமாக ஏற்படும் மாற்றங்களுக்கு அவர்களது உடல் ஈடு கொடுக்குமா எனப் பார்த்துதான் இந்த சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
இல்லாவிட்டால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஹெச்.ஆர்.டி. எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுப்பதன் விளைவாக, உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகலாம்.
ஹெச்.ஆர்.டி. சிகிச்சையில் சில நன்மைகளும் இருக்கின்றன. இந்த சிகிச்சையைக் கொடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்கள் இளமையாகவும், சந்தோஷமாகவும் உணர்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக