தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 நவம்பர், 2014

இரு மனம் உடைந்தால் நடப்பது என்ன?


இரு மனமும் இணைந்தால் அதை திருமணம் என சொல்லுவதுண்டு.
ஆனால் அந்த மனங்களுக்கிடையே மனக்கசப்பு வந்து பெரிய விவகாரமாகிவிட்டால், அது விவகாரத்திலே தான் சென்று முடியும் என்பது உறுதி.
இதற்கு முக்கிய காரணம் புரிதல் இல்லாததே எனவும் கூறலாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் போனால் அந்த உறவு என்றும் நிலைக்காது.
கள்ளக் காதல்
பெரும்பாலன புதுமண தம்பதியினருக்கு இடையே சண்டை வருவது என்பது இந்த காலத்தில் சகஜமாகிவிடுகிறது.
இந்நிலையில் சண்டையால் மனம் நொந்து போகும் ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ வேறு யாரேனும் நன்றாக பேசிவிட்டால் அவர்களின் மனம் மாறிவிடுகிறது.
இது காதலாய் மாறி கள்ள உறவு கொள்ளும் அளவிற்கு சென்றுவிடுகிறது. இறுதியில் இந்த உறவு தம்பதியினரில், எவரேனும் ஒருவருக்கு தெரியவந்தால் அது விவகாரத்தில் முடிந்துவிடுகிறது.
வெட்ட வெளிச்சமாகினால் பிரச்சனையே
ஒரு கணவன்-மனைவிக்குள் எவ்வளவு பெரிய பிரச்சனையானாலும் சரி, அதை நான்கு சுவர்களில் அவர்கள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து மூன்றாவது நபரிடம் கேட்பதோ, நண்பர்களுடன் ஆலோசனை செய்வதோ மேற்கொண்டால் அந்த உறவு சீக்கிரமே முறிந்துவிடும்.
மெளனம் சாதித்தல்
வேலைப்பளு, அலுவலகத்தில் பிரச்சனை என்றெல்லாம் காரணங்கள் கூறிவிட்டு கணவனோ அல்லது மனைவியோ தங்களுக்கிடையே பேசமால், சரியாக நேரம் ஒதுக்காமல் மௌனமாய் இருந்தால், அது சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தி விவகரத்து பெறலாமா? என்ற யோசனைகளை மனதில் ஓடச் செய்யும்.
ஈகோ பிராப்ளம்
கணவன்-மனைவிக்குள் ஒருவருடைய கருத்திற்கு இன்னொருவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
ஈகோ, போட்டி காரணமாக இந்த முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் போனால், வாழ்க்கை போர்க்களம் தான்.
சந்தேகப்படுவது
இவை அனைத்தையும் விட முக்கியமானது நம்பிக்கை. கணவன் மனைவி இருவரும் தங்களை முழுமையாக நம்ப வேண்டும்.
இருவருக்கும் சந்தேக வியாதி வந்துவிட்டால், சில வருடங்கள் என்ன? சில வாரங்களிலேயே விவகாரத்து கோரி, நீதிமன்றம் படி ஏற வேண்டிய நிலை தான் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக