தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 24, 2014

எகிப்து கல்லறையில் நகைகள் அணிந்த பெண் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்து கல்லறையில் நகைகள் அணிந்த பெண் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நைல் நதிக்கரையோரம் உள்ள பழங்கால கல்லறைகளை ஸ்பெயின் புதைப் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அதில் கல்லறை ஒன்றில் அழகிய பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சவப்பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அதற்குள் பெண் மம்மி ஒன்று இருந்துள்ளது. இந்த மம்மி கடந்த 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது என்றும் இது இறந்தபோது 30 வயது இருந்திருக்க கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
அதன் உடலில் தங்கம் மற்றும் வெள்ளியாலான கழுத்தணி, வளையல் மற்றும் காதணிகள் அணிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் புதைக்கப்பட்ட சவப்பட்டி மிகவும் சேதமடைந்திருந்ததால், மம்மியிடமிருந்து நகைகளை திருட கொள்ளையர்கள் பெட்டியை உடைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment