தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 நவம்பர், 2014

இந்தியாவில் மலிவாக கிடைக்கும் வாடகைத் தாய்கள்: கொடிகட்டி பறக்கும் அவலம்


வாடகைத் தாய் தொழில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தையை பெறுவதற்காக நவீன மருத்துவத்தில் பல்வேறு வழிகள் உள்ளன.
அதில் ஒன்று வாடகைத் தாய் முறை. குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு தனது கருப்பையில் குழந்தை வளர்த்து, பெற்றுத்தருபவரே வாடகைத்தாய்.
பல நாடுகள் இம்முறைக்கு தடை விதித்திருக்கின்றன. என்றாலும் இந்தியாவில் இதற்கு தடை இல்லை. பணத்துக்காக மற்றொருவரின் கர்ப்பத்தை தாங்குவதற்கு ஏராளமான வாடகைத்தாய்கள் இங்கு முன் வருகின்றனர்.
வெளிநாட்டு தம்பதிகள் இந்திய வாடகைத்தாய்களிடம் இருந்து தங்கள் குழந்தைகளை பெற்றெடுத்து செல்கின்றனர்.
இந்தியாவில் இரண்டரை கோடி கருத்தரிக்க இயலாத தம்பதிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் பலர் வாடகைத்தாய்கள் மூலம் தங்களுக்கு குழந்தைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
குழந்தை பேறு இல்லாத வெளிநாட்டு தம்பதிகளும் வெளிநாடு வாழ் இந்திய தம்பதிகளும் இந்தியா வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றனர்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்தியாவில் இதற்கான செலவு குறைவு என்பது முக்கிய காரணம்.
எல்லாமே மலிவாக கிடைப்பது போல வாடகைத்தாயும் இங்கு மலிவாக கிடைக்கிறார்கள் என்பதே வெளிநாட்டினரின் அதிக அளவிலான வரவுக்கு காரணம்.
டெல்லி செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வருபவர்களில் 40 சதவீதத்தினர் வெளிநாட்டினர்.
30 சதவீதத்தினர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். ஏனைய சதவீதத்தினர் மட்டுமே இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக