தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 நவம்பர், 2014

ஆசையான வீடு ரொம்ப அழுக்காயிடுச்சா? கவலைய விடுங்க!


வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசிமானதாகும்.
சரியான பராமரிப்பு இல்லையென்றால் வீட்டில் கிருமிகள் புகுந்து வீட்டை சேதப்படுத்துவது மட்டுமின்றி வசிப்போருக்கு நோய்களையும் உண்டாக்கும்.
எனவே வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி நன்கு கழுவ வேண்டும்.
இப்போது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்
வீட்டில் அழுக்குத் துணிகள் நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் அதை உடனடியாக சலவை செய்துவிடுங்கள்.
வீட்டில் உள்ளோர் அனைவரும் தனித்தனி டவல்களை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை மெத்தை உறைகளை மாற்றுங்கள்.
சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடமும் கிருமிகள் வளரும் ஒரு இடமாதலால் அதை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
படுக்கையின் மேல் அமர்ந்து உணவை உட்க்கொள்ள வேண்டாம். ஏனெனில் இதன் மூலம் அங்கு புளு பூச்சிகள் உண்டாகும்.
குளியலறையை கிருமிகள் பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் அதை தினமும் சுத்தம் செய்வதும் மிகவும் அவசியம்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை வீட்டை சுத்தம் செய்வதால் வீடும் பளிச்சென்று இருக்கும், கிருமிகள் அண்டுவதையும் தவிர்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக