நோய் வந்துவிட்டாலே மருத்துவரிடம் ஓடுவதைவிட சில எளிய வீட்டு வைத்திய முறைகளின் மூலம் சரிசெய்ய முடியும்.
* இஞ்சியை அரைத்து கனமாக பற்றுப் போட்டால் தலைவலி சிறிது நேரத்தில் குணமாகும்.
* தேனீ கடித்த இடத்தில் மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்து போட வலியும் வீக்கமும் பறந்துவிடும்.
* பித்த வெடிப்பிற்கு கடுக்காயைத் தண்ணீர் விட்டு உரசி விழுதை வெடிப்புள்ள இடத்தில் தடவி வந்தால் வலியும் வெடிப்பும் மறையும்.
* மூலம், வாயுத்தொல்லை, மாலைக் கண் நோய் உள்ளவர்கள் அடிக்கடி முருங்கைக் கீரை சாப்பிடுவது நல்லது.
* பப்பாளிச் செடியின் பாலை வலிக்கும் பல் மீது தடவிவந்தால் பல்வலி குணமாகும்.
* ஒரு கப் தயிர் தினமும் சாப்பிட்டால் அல்சர் நெருங்காது.
* வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றிலும் குடலிலும் ஏற்படும் புண்கள் ஆறும்.
• குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.
• சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.
• நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
• தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.
• வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.
• மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
• பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக