தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 30, 2014

மென்மையான சருமம் வேண்டுமா? !

பால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்தை மென்மையாக்கவும் பயன்படுகிறது.
பால் சிறந்த மாய்சரைசராகவும், க்ளென்சராகவும் பயன்படுகிறது.
சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் பால் உதவும். ஆடை எடுக்கப்பட்ட பால் எல்லாவித சரும வகைக்கும் ஏற்றது.
முகத்தில் பேக் போடும் பவுடருடன், பால் கலந்து உபயோகிக்கலாம். ஏடோடு இருக்கும் பால் உலர் சருமத்திற்கு ஏற்றதாகும்.
எண்ணெய் சருமத்திற்கு ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது மோர் உபயோகிக்கலாம்.
சரும வறட்சி உள்ளவர்கள் பால் ஏடு எடுத்து தினமும் முகத்தில் தடவி உளர்ந்த பின் கழுவவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி சருமம் பொலிவடைவதை காணலாம்.
கண்களின் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்க பாலாடை க்ரீம் பூசுவது நல்லது. (இது வெளியில் தனியாகக் கிடைக்கும்). தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுபவர்களுக்கு பால் மிகவும் நல்லது.
காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் பூசி சிறிது நேரத்தில் குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்தான்.
எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

No comments:

Post a Comment