பிரித்தானியா மற்றும் தென்மேற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் வாழும் மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே வினோத புகார் ஒன்றை அளித்து வருகின்றனர்.
பிரித்தானியா மற்றும் தென்மேற்கு அமெரிக்காவில் வாழும் மக்களில் சிலருக்கு மர்மமான ரீங்காரம் ஒன்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாக தெரிகிறது.
அனைவருக்கும் கேட்க முடியாத படி மிகவும் குறைந்த சத்தத்தில் ஒலிக்கும் இந்த ரீங்காரம், அதனை கேட்பவர்களின் மன நிலையை பாதிப்பதோடு அவர்களின் தூக்கத்தியும் நிம்மதியையும் வெகுவாக பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.
1977ம் ஆண்டு பிரித்தானிய பத்திரிக்கை ஒன்றுக்கு 800க்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து இந்த ரீங்காரத்தை பற்றிய புகார் கடிதங்கள் வந்துள்ளது.
அந்த கடிதத்தில், இந்த இடைவிடாத ரீங்காரத்தினால் தூக்கமின்மை, தலைச்சுற்றல், சுவாசப் பிரச்சனை, தலைவலி, படபடப்பு, எரிச்சல், உடல்நிலை திணறல் மற்றும் எழுத, படிக்க இயலாமை போன்ற எண்ணற்ற சிக்கல்கள் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல அமெரிக்காவில் டாவொஸ் ஹம் என்றழைக்கப்படும் மர்ம ரீங்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சத்தத்தின் காரணத்தை கண்டறிய வேண்டுமென்று ஒன்று கூடி மனு அளித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த மர்ம ரீங்காரத்தின் காரணத்தை கண்டறிய பல பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒன்றினைந்து பல வகையில் சோதனைகளை மேற்கொண்டனர்.
ஆனால் இதுவரை இந்த சத்தத்திற்கான முடிவான காரணங்கள் விடைகாண முடியாத மர்மமாகவே நீடித்து வருகிறது.
மேலும், உலக மக்கள் தொகையில் வெறும் 2 சதவிகித மக்களால் மட்டுமே இந்த ரீங்காரம் உணரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 22 நவம்பர், 2014
மன நிம்மதியை கெடுக்கும் மர்ம ரீங்காரம்: புகார் அளித்த மக்கள் (வீடியோ இணைப்பு) !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக