தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 நவம்பர், 2014

தாலி காக்கும் திரௌபதி


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் திரௌபதிக்கு ஓர் ஆலயம் உள்ளது.
அருள்மிகு தர்மராஜா திருக்கோவில் என்ற பெயர் கொண்ட இந்த ஆலயத்தில், திரௌபதி கருவறை நாயகியாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
தர்மராஜாவுக்கு என்று கருவறையில் சிலை எதுவும் அமைக்கப்படவில்லை. மாறாக, ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அர்த்த மண்டபத்தில் பஞ்சபாண்டவர்களின் உற்சவ சிலைகளும், திரௌபதியின் சிலையும் கண்கவர் வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.
மகாபாரதம் என்னும் புனித நூல் கிடைக்க காரணமான பஞ்ச பாண்டவர்களுக்கும் வேறு எந்த ஆலயத்திலாவது இப்படி சிலைகள் இருக்குமா என்பது சந்தேகமே.
பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதி. தமிழ்நாட்டில் பல ஊர்களில் திரௌபதிக்கு என்று தனியாக பல ஆலயங்கள் இருக்கின்றன.
திரௌபதியை தம் ஊர் காவல் தெய்வமாய் பல கிராம மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
ஆலய அமைப்பு
கதிராமங்கலத்தில் உள்ள திரௌபதி அருள்பாலிக்கும் ஆலயமானது, கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
கோவிலுக்குள் நுழைந்ததும் அழகான முன் மண்டபமும், அதைத் தொடர்ந்து மகா மண்டபமும் காட்சியளிக்கின்றன.
அதற்கடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் துவார பாலகர்களின் திருமேனிகள் வீற்றிருக்கின்றன.
இவை சுதை வடிவத் திருமேனிகள் ஆகும். அடுத்தாற்போல் கருவறையில் திரௌபதி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் இன்முகம் மலர பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
ஆலயத்தின் உள்ளே நுழையும் முன் இடதுபுறம் அரவானின் சன்னிதி இருக்கிறது. திரௌபதி ஆலயங்களில் தவறாது அரவானின் சன்னிதி இடம்பெற்றிருக்கும்.
திரௌபதியை வழிபடுவதால் தங்களது தாலி பாக்கியம் நிலைக்கும் என பெண்கள் நம்புவது உண்மையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக