சிறுநீர் கழிக்கும் உரிமை என்ற பெயரில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்களால் இயற்கை உபாதையை அடக்கி வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. ஒரு நாளைக்கு சராசரியாக 13 மணி நேரம் வரை அவர்கள் சிறுநீரை தங்களது சிறுநீர்ப் பையில் அடக்கி வைக்கிறார்கள்.
அவர்களுக்கென பொதுக் கழிப்பறை வசதி இல்லாததே இதற்கு காரணம் ஆகும்.
இந்தப் பிரச்சனை கிராமங்களை விட நகரங்களில் தான் மேலோங்கி இருக்கிறது.
இந்த காணொளியில் அந்தப் பெண்மணி, சிறுநீர் கழிக்கும் இடத்தை, ஒவ்வொருத்தரிடமும் கேட்கிறார். அதற்கு ஒவ்வொருவரும் விதவிதமான பதில் கூறுகின்றனர்.
இறுதியில், பெண்கள் செவ்வாய்க்கு போய் என்ன பயன், பாதுகாப்பாக பொது இடங்களில் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்று கூறுகிறார்.
இந்த காணொளியானது மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக