தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 நவம்பர், 2014

பாலைவனத்தில் பூக்கள் பூக்குமா? இதோ வியக்க வைக்கும் அதிசயம் (வீடியோ இணைப்பு) !

பாலைவனம் என்றாலே கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கும் வறண்ட நிலம் மட்டுமே தான் இருக்கும் என நினைக்கும் வேளையில், பல வகையான வண்ண மலர்கள் இந்த பாலைவனத்தில் ஆண்டின் குறிப்பிட்ட நேரத்தில் பூத்து குலுங்குகிறது.
சிலி நாட்டில் உள்ள அடாகாமா என்ற பாலைவனத்தில் வருடத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் மட்டும் 200க்கும் மேற்பட்ட வகையான வண்ண மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன.
பாலைவனம் என்றாலே கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கும் வறண்ட நிலமும், மணலும், ஒரு சில அரிய மரங்களை மட்டும் தானே பார்த்திருப்போம்.
ஆனால் சிலியில் உள்ள இந்த பாலைவனத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் பெய்யும் அதிகபட்ச கனமழையால் ஏற்கனவே கடந்த பருவத்தில் பூக்கவும், காய்க்கவும் தயாராக இருந்த விதைகள் மற்றும் மொட்டுக்கள் நன்கு வளர்ந்து பூக்கத் தொடங்குகின்றன.
’எல் நினோ’ என்றழைக்கப்படும் இயற்கை நிகழ்வால் நடக்கும் இந்த அதிசய காட்சியினை காண பல சுற்றுலாவாசிகளும் வர தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மழையின் அளவை பொருத்தே மலரும் பூக்களின் அளவு இருக்கும் என்று தெரிகிறது. சில சமயங்களில் மட்டுமே அளவிற்கு அதிகமாக மழைப் பொழிவு இருக்கும்.
இவ்வாறு அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு இருக்கும் போதுதான் அதிக அளவிளான மலர்கள் பூக்கத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வறண்ட நிலமான பாலைவனத்தில் காணும் திசையெங்கும் அழகழகான பூக்கள் பூத்துக் குலுங்குவதற்கு இயற்கையின் ரகசியம் மட்டுமே முக்கிய காரணம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக