உலகம் நவீன மயமாகிவிட்டாலும், கைப்பேசியில் அதிகமான புகைப்படங்கள் எடுப்பதை பெண்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
கைப்பேசி , கணனி பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை.
அதுவும் தங்கள் கைப்பேசியில் எடுக்கப்பட்ட ரகசிய புகைப்படங்கள், காணொளிகள் அழிந்திருந்தாலும் (Delete) மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விடயம் ஒன்று தெரியுமா.
அந்த விடயம் தெரியாமல் தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை கைப்பேசியிலும், டிஜிட்டல் கமெராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள்.
பின்னர் அழித்து (Delete) செய்து விடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும்.
அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள்.
இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ரெக்கவரி மென்பொருட்கள் இருக்கின்றன.
இதன் மூலம் திரும்பப் பெறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள்.
இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம்.
ஆனால், ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இணையதளத்தில் பரப்பி விடுகிறார்கள்.
அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கமெரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள்.
கணனியில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கணனிகள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும்.
பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கமெராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கமெராக்காள் வந்து விட்டன.
திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக