தாய்லாந்தின் புகழ்பெற்ற அழகி 67 வயதானாலும், 18 வயதுக்கு ஏற்ற இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தாய்லாந்தில் முதல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர் அபாஸ்ரா ஹாங்சகுலா.
1947-ம் ஆண்டு பிறந்த அபாஸ்ரா, 18 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார்.
அதன்பின் சில ஆண்டுகள் புகழ் பெற்று விளங்கினாலும் காலப்போக்கில் உலகம் அவரை மறந்துவிட்டது.
இந்நிலையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அபாஸ்ரா வெளிச்சத்துக்கு வந்துள்ளார், தற்போது இவரை பற்றி பேசாத ஊடகங்களே இல்லை என்று கூறலாம்.
இதற்கு காரணம் இன்றும் அழகு சிறிதுகூட குறையாமல் இளமையுடன் இருக்கிறார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார், இளமைக்காகப் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவினாலும், ஆரோக்கியமான அளவான உணவு, உடற்பயிற்சி, சந்தோஷமான மனநிலைதான் இளமைக்கு காரணம் என தெரிவிக்கிறார் அபாஸ்ரா.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 3 நவம்பர், 2014
இவருக்கு 67 வயதா? உங்களால் நம்ப முடிகிறதா!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக