எங்கு பார்த்தாலும் நான் குண்டா இருக்கேனே...உடல் எடையை குறைக்க வேண்டுமே என்ற பேச்சு தான்.
இதற்காக எத்தனையோ செயற்கை மருந்து பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும், இயற்கையான ஆரோக்கியமான உணவுகளின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.
உங்களுக்கான கோடைக்கால பழங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
தர்பூசணி
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல்வறட்சி அடையாமல் இருப்பதுடன் அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும், இதனால் உடல் எடையை அதிகரிக்காது.
பப்பாளி
இதில் கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால் டயட்டில் சேர்த்து வரும் போது உடல் எடை குறைவதுடன், வயிற்று பிரச்னைகளுக்கு வழிபிறக்கும்.
லிச்சி
நார்ச்சத்து அதிகம் கொண்ட லிச்சியில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது, அதிக சுவை கொண்ட இப்பழம் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
ப்ளம்ஸ்
ப்ளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடுகிறது, மேலும் உடலில் தங்கியுள்ள டாக்சின்களையும் வெளியேற்றிவிடும்.
மாம்பழம்
பலரும் விரும்பும் மாம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன, உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு உகந்த பழமாக இருக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக